45) அவ்லியாக்கள் என்றால் யார்?
45) அவ்லியாக்கள் என்றால் யார்?
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
அல்லாஹ் ஒவ்வொரு படைப்பிணங்களையும் வெவ்வேறு கோணங்களில் படைத்துள்ளான். இருப்பினும் மனிதனை ஒரு உயர்ந்த, கண்ணியம் வாய்ந்த படைப்பாக படைத்துள்ளான். இந்த மனிதர்களிலேயே அதி கண்ணியம் வாய்ந்த மனிதராக எங்கள் உயிரிலும் மேலான சர்தார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களாகும். அன்னவர்களுக்கு பின் கண்ணியமானவர்கள் ரஸூல்மார்களாகும். இந்த ரஸூல்மார்களுக்கு பின் கண்ணியமானவர்கள் ஏனைய நபிமார்களாகும். நபிமார்களுக்கு பின் கண்ணியமானவர்கள் ஸஹாபாக்களாகும். இந்த ஸஹாபாக்களுக்கு பின் கண்ணியமானவர்கள் தாபியீன்களாகும். இந்த தபியீன்களுக்கு பின் கண்ணியமானவர்கள் தபஅத்தாபியீன்களும். இந்த தபஅத்தாபியீன்களுக்கு பின் கண்ணியமானவர்கள் இறைநேசர்களாகும். இந்த இறைநேசர்களுக்கு பின் கண்ணியமானவர்கள் இஸ்லாமிய இமாம்களாகும். இமாம்களுக்கு பின் கண்ணியமானவர்கள் ஏனைய முஃமின்களாகும். முஃமின்களுக்கு பின் கண்ணியமானவர்கள் முஸ்லிம்களாகும்.
அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்கள் நெருக்கத்துக்குறியவர்கள் விருப்பத்துக்குறியவர்கள். மேலும் வலி என்றால் இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் பல இறைநேசர்களை குறிக்கும்.
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
குர்ஆன் கூறுகிறது (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்.
சூரா யூனுஸ் ஆயத் 62
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். மறுமை அல்லாத இவ்வுலக விஷயத்தில் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான். எவன் என் இறைநேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் யுத்தப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6502
அல்லாஹ்வின் அவ்லியாக்களை நோவினை செய்பவர்கள் அவர்களை பகைப்பவர்களோடு அல்லாஹ் யுத்தப் பிரகடனம் செய்கிறான். மேலும் அவ்லியாக்களுடன் அல்லாஹ் நெருக்கமான முறையில் இருக்கிறான். அவர்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் அந்த துஆக்கள் உடனடியாக அங்கிகரிக்கப்படும் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்