47) எல்லைமீறலும் அத்துமீறலும்
எல்லைமீறலும் அத்துமீறலும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
எந்த விதத்திலும் எல்லை மீறாதீர்கள்
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلَكَ الْمُتَنَطِّعُونَ قَالَهَا ثَلَاثًا
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்” என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2670 அஹ்மது 3655
வரம்புமீறி புகழாதீர்கள்
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ فِي الْمِدْحَةِ فَقَالَ أَهْلَكْتُمْ أَوْ قَطَعْتُمْ ظَهْرَ الرَّجُلِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், “அந்த மனிதரின் முதுகை “அழித்துவிட்டீர்கள்’ அல்லது “ஒடித்து விட்டீர்கள்’ ” என்று (கடிந்து) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2663 முஸ்லிம் 3001 அஹ்மது 19692
அடிமைகளை அத்துமீறி அடிக்காதீர்கள், அவர்களை துன்புறுத்தாதீர்கள்
عَنْ أَبُو مَسْعُودٍ الْبَدْرِي رَضِيَ اللَّهُ عَنْهُ كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي بِالسَّوْطِ فَسَمِعْتُ صَوْتًا مِنْ خَلْفِي اعْلَمْ أَبَا مَسْعُودٍ فَلَمْ أَفْهَمْ الصَّوْتَ مِنَ الْغَضَبِ قَالَ فَلَمَّا دَنَا مِنِّي إِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَقُولُ اعْلَمْ أَبَا مَسْعُودٍ اعْلَمْ أَبَا مَسْعُودٍ قَالَ فَأَلْقَيْتُ السَّوْطَ مِنْ يَدِي فَقَالَ اعْلَمْ أَبَا مَسْعُودٍ أَنَّ اللَّهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلَامِ فَقُلْتُ لَا أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا
நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, “நினைவிருக்கட்டும், அபூ மஸ்ஊத்!” என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக் கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் “நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் “நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள். நான், “இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமையையும் அடிக்கமாட்டேன்” என (உறுதி) மொழிந்தேன்.
அறிவிப்பவர் :- அபூ மஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1659 திர்மிதி 1948 அஹ்மது 17087
யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தை ஒருவர் பரிபாலனம் செய்து, விவசாயம் செய்து, வசித்து வந்தால், அந்த நிலத்திற்கு அவரே! உரிமையாளராவார்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ قَالَ عُرْوَةُ قَضَى بِهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي خِلَافَتِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் ஆட்சிக் காலத்தின் போது இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்’
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2335 அஹ்மது 24883
தன் எதிரிகளாக இருந்தாலும் அடைக்கலம் கொடுங்கள்
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى خَيْبَرَ الْيَهُودَ عَلَى أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا خَرَجَ مِنْهَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப்பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிடவேண்டும்)’ என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2331 தாரமீ 2656
தனக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். வேலைக்கு மேல் எடுக்காதீர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ فَضْلُ الْكَلَإِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற்பூண்டுகளை (மேயவிடாமல் கால்நடைகளை)த் தடுத்தாம் விடும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6962 முஸ்லிம் 1566 அபூதாவூத் 3473
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்