47) கந்தூரி பற்றிய ஆய்வுத் தொகுப்பு
47) கந்தூரி பற்றிய ஆய்வுத் தொகுப்பு
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
கந்தூரி என்ற சொல் அரபு மற்றும் தமிழ் மொழி அல்ல. அது பாரசீக மொழியாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் கந்தூரி என்ற சொல் கூடி கலைதல், உணவளித்தல் என்ற அர்த்ததின் அடிப்படையில் பயன் படுத்தப்படுகிறது அதாவது ஓர் இடத்தில் ஒரு கூட்டம் ஒன்று கூடிவிட்டு அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றால் இதற்கும் கந்தூரி வைபகம் என்று கூறலாம்.
உதாரணமாக :- திருமணம், ஜமாத் தொழுகை, ஜும்ஆ, திக்ரு மஜ்லிஸ், ஷிர்கு ஒழிப்பு மாநாடு, தவ்ஹீத் கூட்டம், இஜ்திமா, வலிமா விருந்து, இப்தார், இது போன்ற பல நிகழ்வுகளில் மக்கள் ஒன்று கூடிவிட்டு அவர்கள் கலைந்து செல்கிறார்களே இதற்கும் கந்தூரி என்ற வார்த்தையை பயன் படுத்த முடியும். இருப்பினும் நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அவர்களை நினைவு கூறி அவர்களின் பெயரில் அன்னதானம் கொடுக்கப்படும் சபைகளுக்கு பொதுவாக கந்தூரி நிகழ்வு எனக்கூறப்படுகிறது.
கந்தூரி நிகழ்வுகளும் அதன் நோக்கமும்
♦️1) கந்தூரி நிகழ்வுகளில் உறவுகள் இனபந்துக்கள் ஒன்றினைகிறார்கள்.
عَنْ عَاصِمٌ قَالَ قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا حِلْفَ فِي الْإِسْلَامِ فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ قُرَيْشٍ وَالْأَنْصَارِ فِي دَارِي
இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?’ என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், ‘என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே! என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆஸிம் ரஹ்மத்துல்லாஹ். ஆதாரம் புஹாரி 2294, 6083 முஸ்லிம் 2529
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1935
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَأَنْ يُزَادَ لَهُ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீண்ட ஆயுள் கிடைப்பதற்கும் உணவில் விஸ்தீரணம் கிடைப்பதற்கும் யார் விரும்புகிறாரோ அவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும், தன் உறவுகளை ஆதரித்து வாழட்டும்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 2488
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் உறவு முறைகளை வழுப்படுத்தினார்கள், மக்களை ஒன்றினைதார்கள், உறவினர்களுடன் இனபந்துக்களுடன் ஒன்றினைந்து வாழுங்கள், இதன் மூலம் அதிகளவில் பலன்களை பெற்றுக் கொள்வீர்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
கந்தூரி நிகழ்வுகளில் உறவினர்கள் இனபந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். ஒற்றுமையாக அந்த நிகழ்வை செய்து வருகின்றனர், இதனை பெரும் பாவம் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ் அந்த பெரும் பாவத்தை செய்யுமாறு ஏவுகிறது என்றல்லவா அர்த்தமாகும்.
♦️2) கந்தூரி நிகழ்வுகளின் மூலம் நபிமார்கள் நல்லடியார்களை பற்றி ஞாபகம் ஊட்டப்படுகிறது
وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
குர்ஆன் கூறுகிறது உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு ஞாபகமூட்டுதலும் இருக்கின்றன.
சூரா ஹூத் ஆயத் 120
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கட்கிழமை தோறும் நோன்பு நோற்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் இது பற்றி ஸஹாபாக்கள் வினவிய போது இன்றைய நாளில் தான் நான் பிறந்தேன் என்பதாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- கதாதத அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1162
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا رَأَيْتُهَا وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் அவர்களை பார்த்ததில்லை. ஆனால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3828 முஸ்லிம் 2435
இறைத்தூதர்களையும் அவர்களின் சரித்திரங்களும் ஞாபகம் ஊட்டுவதன் மூலம் அதிகளவில் படிப்பினை பெறுவீர்கள் என்றும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வாரமும் ஞாபகம் ஊட்டினார்கள் என்றும் மரணம் அடைந்த கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அதிகமாக ஞாபகம் ஊட்டினார்கள் என்றும் மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
கந்தூரி நிகழ்வுகளின் மூலம் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை பற்றிய அதிகளவில் ஞாபகம் ஊட்டப்படுகிறது, இதனை பெரும் பாவம் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ் அந்த பெரும் பாவத்தை செய்யுமாறு ஏவுகிறது என்றல்லவா அர்த்தமாகும்.
♦️3) கந்தூரி நிகழ்வுகளில் நபிமார்கள் நல்லடியார்களை பற்றிய வரலாறுகள் புகழ்ந்து பேசப்படுகிறது
لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
குர்ஆன் கூறுகிறது அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.
சூரா யூசுப் ஆயத் 111
திருக்குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்கள் நல்லடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை புகழ்ந்து கூறியது மட்டுமின்றி திருக்குர்ஆனில் அரைவாசி பகுதியே நபிமார்கள் நல்லடியார்களின் வரலாற்று குறிப்புகள் மற்றும் தந்திரங்களை மக்களுக்கு படிப்படியாக உள்ளடக்கி வைத்துள்ளான் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
عَنْ اَنَسِ بْنِ مَالِكِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ مَرُّوْا بِحَنَازَةَ فَاَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُبْنُ الْخَطَّابِ مَا وَجَبَتْ قَالَ هَدَا اَثْنَيْتُمْ عَلَيْه خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள் அந்த ஜனாஸாவை பற்றி) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1278, முஸ்லிம் 1578
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 940 அபூதாவூத் 4254
عَنْ مُعَاذُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذِكْرُ اْلاَنْبِيَاءِ مِنَ الْعِبَادَةِ وَذِكْرُ الصَّالِحِيْنَ كَفَّارَةٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும்.
அறிவிப்பவர் :- முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அல் ஜாமிவுஸ் ஸகீர் 4331
நபிமார்கள் நல்லடியார்களின் சரித்திரங்கள் வாழ்க்கை குறிப்புகளை மக்களுக்கு எடுத்துறைக்க வேண்டும் மேலும் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை நினைவு கூர்வது மட்டுமின்றி அவர்களின் சிறப்புகளை வாழ்க்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
கந்தூரி நிகழ்வுகளின் மூலம் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களை பற்றிய அதிகளவில் அவர்களின் சிறப்புக்கள் வாழ்க்கை வரலாறுகள் பற்றி பேசப்படுகிறது, இதனை பெரும் பாவம் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ் அந்த பெரும் பாவத்தை செய்யுமாறு ஏவுகிறது என்றல்லவா அர்த்தமாகும்.
♦️4) கந்தூரி நிகழ்வுகளில் உணவழிக்கப்படுகிறது அன்னதானம் செய்யப்படுகிறது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, நீர் (ஏழைகளுக்கு) உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 12
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! ஸலாமை பரப்புங்கள் (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2485 இப்னு மாஜா 1334
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُكُّوا الْعَانِيَ يَعْنِي الأَسِيرَ وَأَطْعِمُوا الْجَائِعَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்.
அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3046
உணவளிப்பது அன்னதானம் செய்வது முஸ்லிம்களின் சிறந்த பண்புகளாகும், இஸ்லாம் உணவளிப்பதையும் அன்னதானம் செய்வதையும் தர்மம் கொடுப்பதையும் அதிகம் விரும்புகிறது. இதன் மூலம் அதிகளவில் பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
கந்தூரி நிகழ்வுகளில் அனைவரும் ஒன்றினைவது மட்டுமின்றி அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது அன்னதானம் வழங்கப்படுகிறது, இதனை பெரும் பாவம் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ் அந்த பெரும் பாவத்தை செய்யுமாறு ஏவுகிறது என்றல்லவா அர்த்தமாகும்.
குறிப்பு :- நல்ல நோக்கத்திற்காக இனபந்துக்கள் ஒன்றினைகிறார்கள், நபிமார்கள் நல்லடியார்களை நினைவு கூறுவது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் சிறப்புக்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுகிறார்கள். மேலும் உணவளிப்பது மட்டுமின்றி அன்னதானமும் கொடுக்கின்றார்கள். இவையெல்லாம் நன்மைகளை அள்ளித்தரும் ஸுன்னத் நபிவழியாகும். இவ்வாறு பல ஸுன்னத்துக்களை ஒன்று சேர்த்து தான் கந்தூரி என்ற நிகழ்வை முஸ்லிம்கள் ஒன்றினைந்து ஒற்றுமையாக செய்து வருகிறார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி :- பல ஸுன்னத்துகளை ஒன்று சேர்த்து கந்தூரி என்ற பெயரில் ஓர் நிழ்வை உருவாக்கலாமா?
عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1017, திர்மிதி 2675, தப்ரானி 2372
யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறை ஸுன்னத்தை உருவாக்குகிறாரோ அவருக்கும் நன்மை உண்டு அதனை நடைமுறை படுத்துபவர்களுக்கும் நன்மை உண்டு என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- இனபந்துக்கள் ஒன்றினைவது மட்டுமின்றி நபிமார்கள் நல்லடியார்களின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைப்பது உணவளிப்பது அன்னதானம் செய்வது போன்ற பல ஸுன்னத்துக்களை ஒன்றினைத்து கந்தூரி எனக் கூறப்படுகிறது, இவ்வாறான நிகழ்வுகளை செய்வதன் மூலம் பல சிறப்புகளையும் நன்மைகளையும் நாம் அடைந்து கொள்ள முடியும் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
கேள்வி :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் கந்தூரி என்ற பெயர் பயன் படுத்தப்பட்டதா?
பதில் :- கந்தூரி என்ற பெயர் அரபு தமிழ் சொல் கிடையாது. அது பாரசீக மொழி சொல்லாகும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் கந்தூரி என்ற சொல் பயன்படுத்தவில்லை. இஸ்லாத்தை பொருத்த வரையில் அரபு பெயர் அல்லாத வேறு மொழி பெயர்களை மக்கள் கூறுவதால் அதில் எவ்வித குற்றமும் இல்லை. உதாரணமாக அதானுக்கு பாங்கு என்று சொல்வதை போல இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பல ஸுன்னத்துக்களை ஒன்றினைத்த ஓர் நிகழ்வுக்கு தந்தூரி எனக் கூறப்படுகிறது.
குறிப்பு :- கந்தூரி என்ற சொல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் பயன் படுத்தப்படவில்லை என்ற காரணத்தால் அது தவறு அது வழிகேடு என்று கூறமுடியாது. உதாரணமாக தப்லீக் ஜமாத், தவ்ஹீத் ஜமாஅத், தாருத் தவ்ஹீத் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களே! இந்த சொல் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளதா? மேலும் ஷிர்கு ஒழிப்பு மாநாடு, இஜ்திமா, பெண்கள் பயான், தவ்ஹீத் பொது கூட்டம், இறத்த தானம், ஊர்வலம், பைசல் ஜமாஅத் போன்ற இவ்வாறான சொற்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இவ்வாறான நிகழ்வுகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடைபெற்றதா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்