48) கந்தூரி நிகழ்வுகளில் ஆண் பெண் கலந்து செல்லலாமா?

213

48) கந்தூரி நிகழ்வுகளில் ஆண் பெண் கலந்து செல்லலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قال سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي

 

நான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதேர்ச்சையாக (அன்னிய பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக்கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4025

 

عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ

 

ஒரு முறை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது பாதையில் (தொழுது விட்டு சென்ற ) ஆண்கள் பெண்கள் கலந்து வெளியேறுவதை கண்ட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை பார்த்து “நீங்கள் பாதைகளின் ஓரங்களை பற்றி பிடித்து கொள்ளுங்கள் “என்ற மாத்திரம் ஸஹாபி பெண்மணிகள் தங்கள் ஆடைகள் சுவர்களில் உரசும் அளவிற்கு சுவருக்கு மிக நெருக்கமாக நடந்து சென்றார்கள் என்பதை பார்க்கிறோம்.

 

அறிவிப்பவர் :- ஹம்ஸத் இப்னு அபூஷைதில் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 5272

 

தொழுகை முடிந்த பின்னர் பாதைகளில் வருவதாக இருந்தாலும் சரி கந்தூரி மௌலிது மீலாது திருமண நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அது அல்லாத நிகழ்வுகளாக இருந்தாலும் சரி ஆண்களும் பெண்களும் இரண்டரை இழந்து விடக்கூடாது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

கேள்வி :- கந்தூரி போன்ற நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் கலந்த காரணத்தால் கந்தூரி நிகழ்வை தடுக்க முற்படலாமா?

 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் கலக்காத ஏதாவது ஒரு திருமணத்தை உலகில் எங்காவது காணமுடியுமா? இவ்வாறு திருமணங்களில் ஆண்கள் பெண்கள் கலப்பதால் திருமணத்தை தடுக்க வேண்டும் என்று யாராவது கூறியுள்ளார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

திருமணம் ஸுன்னத் ஆண்கள் பெண்கள் கலப்பது ஹராமாகும் அதே போண்று கந்தூரி ஸுன்னத் ஆண்கள் பெண்கள் கலப்பது ஹராமாகும். ஆக திருமண நிகழ்வுகளாக இருந்தாலும் சரி கந்தூரி நிகழ்வுகளாக இருந்தாலும் சரி இவ்வாறான இடங்களில் ஆண்கள் பெண்கள் கலந்தால் ஆண் பெண் கழப்பதை தடுக்க வேண்டுமே தவிர திருமண நிகழ்வை கந்தூரி நிகழ்வை தடுக்க முற்படுவது முற்றிலும் தவறு. அது வழிகேடர்களின் செயலாகும்.

 

தந்தூரி போன்ற ஸுன்னத்தான அமல்களை தடுக்க முற்படும் வஹ்ஹாபிஷ சகோதர சகோதரிகளே! உங்கள் அமைப்புகளை கூர்ந்து கவனியுங்கள். இன்றைய காலகட்டத்தில் நடு தெருவில் அன்னிய ஆண்களுக்கு முன்னிலையில் கொடி பிடிப்பது மட்டுமின்றி கரகோஷம் போடும் வஹ்ஹாபிஷ பெண்களை ஏன் நீங்கள் தடுக்கவில்லை? தெருமுனை பிரச்சாரம் பொது கூட்டம் மாநாடு திடல் தொழுகை என்ற பெயரில் வஹ்ஹாபிஷ ஆண்கள் பெண்கள் கலப்பதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை? சற்று சிந்தித்துப் பாருங்கள். பாதையோரங்களிலும் வாகனங்களிலும் கடைவீதிகளிலும் சந்தையிலும் கடற்கரைகளிலும் இவ்வாறான பல இடங்களில் முஸ்லிம் ஆண்கள் பெண்கள் கலந்து விடுகிறார்கள் இவர்களை யாராவது தடுத்துள்ளார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

குறிப்பு :- கந்தூரி நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அது அல்லாத நிகழ்வுகளாக இருந்தாலும் சரி ஆண்கள் பெண்கள் இரண்டரை கழப்பது மட்டுமின்றி அங்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களுக்கு முற்றிலும் முறனான நடனம் நாட்டியம் கச்சேரி போன்ற என்னெற்ற விடயங்கள் அனைத்தும் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆரம்பத்தில் அஹ்லுஸ் ஸுன்னா அமைப்புக்களும் அது அல்லாத அமைப்புக்களும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.