5) கேள்வி :- இறைதூதர் ﷺ அவர்கள் தங்களது மனைவிமார்களை அடிமைகளாக பயன் படுத்தினார்களா?

117

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا سُئِلَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ كَانَ يَخِيطُ ثَوْبَهُ  وَيَخْصِفُ نَعْلَهُ وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرِّجَالُ فِي بُيُوتِهِمْ 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீடுகளில் என்ன வேலை செய்வார்கள் என்று வினவியபோது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள், தங்களது கிழிந்த ஆடைகளையும், அறுந்த செறுப்பையும்  தாங்களே தைத்து சரி செய்து  கொள்வார்கள். மேலும்  ஆண்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள்.

நூல் ஆதாரம் :- அஹ்மது 24339

  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ خَادِمًا لَهُ قَطُّ وَلَا امْرَأَةً وَلَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ شَيْئًا قَطُّ إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கரத்தால் எந்த மனைவியையும், எந்த பணியாளரையும் அடித்ததில்லை. எந்த ஒன்றுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடித்ததில்லை, போர்க்களத்திலேயே தவிர.

நூல் ஆதாரம் :- அஹ்மது 25375 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது கிழிந்த ஆடைகளையும் அறுந்த பாதணியையும் தானே தைத்துக் கொள்வார்கள், ஆண்கள் வீட்டில் செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வார்கள். மேலும் தன்னுடைய எந்த மனைவியர்களுக்கும், தன் பணியாளர்களுக்கும், அது அல்லாத எவர்களுக்கும் அநியாயமாக அவர்கள் அடிக்க மாட்டார்கள். தெளிவான முறையில் கூறப்போனால் எவர்களையும் அவர்கள் அடிமையைப் போன்று நடத்த மாட்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :- இறைதூதர் ﷺ அவர்கள் தங்களது மனைவிமார்களை அடிமைகளாக பயன் படுத்தவில்லை. குறிப்பாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அடிமையாக பயன் படுத்தவில்லை. அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால்! மற்ற பெண்களுடன் அன்னை அவர்கள் விளையாடும் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ வாலிப பெண் என்று கூறியவாறு அவர்களை தடுக்கவில்லை. அவர்களுக்குறிய சுதந்திரத்தை கொடுத்தார்கள். சில சமயங்களில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாடும் போதும் சமைக்கும் போதும் அவர்களுடன் இணைந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விளையாடியுள்ளார்கள், சமைத்தும் இருக்கின்றார்கள். ஆக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திக்கவில்லை. அவர்களுக்குறிய முழு சுதந்திரத்தையும் கொடுத்தார்கள், அவர்களுடன் அன்பாக நடந்து கொண்டார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

WORLD ISLAM YSYR ✍️      அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.