5) நபி முஹம்மத் ﷺ அவர்களின் உமிழ்நீர்

133

நபி முஹம்மத் ﷺ அவர்களின் உமிழ்நீர்

 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالُوا يَشْتَكِي عَيْنَيْهِ يَا رَسُولَ اللهِ قَالَ فَأَرْسِلُوا إِلَيْهِ فَأْتُونِي بِهِ فَلَمَّا جَاءَ بَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ فَأَعْطَاهُ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அலி இப்னு அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண் வலி, யா ரஸுலல்லாஹ்! என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் தம் உமிழ்நீரை உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குணமடைந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3701 முஸ்லிம் 2406 அஹ்மது 22821

 

عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ …. ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَيْنَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ وَإِذَا أَمَرَهُمْ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ

 

உர்வா கூறினார், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைத் தம் இரண்டு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) உமிழ்ந்து துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்யும் போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசும் போது தம் குரல்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். மேலும், நபியவர்களுக்கு கண்ணியமளிக்கும் விதத்தில் அவர்களைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்க்க மாட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- மிஸ்வர் இப்னு மக்ரமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2732 அபூதாவூத் 2765 அஹ்மது 18910, 18928

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.