5) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து தெருக்களில் மௌலிது கவி பாடல்கள்
5) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து தெருக்களில் மௌலிது கவி பாடல்கள்
ﻋَﻦ ﺍﻧَﺲِ ﺑﻦِ ﻣَﺎﻟِﻚٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ﺍَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻣَﺮَّ ﺑِﺒَﻌْﺾِ ﺍﻟْﻤَﺪِﻳْﻨَﺔِ ﻓَﺎَﺫَﺍ ﻫُﻮَ ﺑِﺠَﻮَﺍﺭِ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺪُﻓِّﻬِﻦَّ ﻭَﻳَﺘَﻐَﻨَّﻴْﻦَ ﻭَﻳَﻘَﻠْﻦَ ﻧَﺤْﻦُ ﺟَﻮَﺍﺭِ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺍﻟﻨَّﺠَّﺎﺭِ ﻳَﺎﺣَﺒَّﺬَﺍ ﻣُﺤَﻤَّﺪٌﺍ ﻣِﻦْ ﺟَﺎﺭِ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻳَﻌْﻠَﻢُ ﺍﻟﻠﻪ ﺍِﻧِّﻲْ ﻷْﺣُﺒُّﻜُﻦَّ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு (தெரு) பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து (மௌலிது) கவி பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1889
عَن النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ فِي الْهِجْرَةِ خَرَجَتْ بَنَاتُ النَّجَّارِ بِالدُّفُوفِ وَهُنَّ يَقُلْنَ طَلَعَ البَدْرُ عَلَيْنَا مِنَ ثَنِيَّاتِ الوَدَاع وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا مَا دَعَى لِلَّهِ دَاع
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து செய்து மதீனாவிற்கு வந்த போது (அந்த தெருவில் வைத்து பெண்களும்) பனு நஜ்ஜார் சிறுவர்களும் தப் ரபான் அடித்து பின்வருமாறு மௌலிது கவி பாடினார்கள். தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ
ஆதாரம் :- தபரி” மீஸான், 1/38 பைஹகி தலாயிலுன் நுபுவ்வா 5/267
♦️தெருக்களில் தப் ரபான் கருவிகளைக் கொண்டு இசைப்பதும் மௌலிது கவி பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்