5) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
5) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
தமிழன்பன் என்ற அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான். அவர் ஒட்டக தேசத்தில் பிறந்தார்; ஒட்டாத அகங்களை எல்லாம் ஒட்டி வைத்தார். அவரைப் பற்றி எழுதும் இரவுகளில் விளக்குகள் ஏற்ற வேண்டியதில்லை; எழுத்துக்களிலேயே பளிச்சென்று வெளிச்சம்!
அறிஞர் அண்ணா என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறுகிறார்.
அரபியப் பாலைப் பிரதேசத்தில் முஹம்மது நபி அவதரித்தது அரேபிய நாட்டிற்கும். இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
கண்மூடிப்பழக்கங்களை கைவிடாச் செய்து, காட்டுமிராண்டி தன்மையினரை உயர்ந்த சமுதாயமாய் மாற்றி நெருக்கடியான நேரங்களிலும் இலட்சியங்களை நிறைவேற்றத் தவறாத கடமை வீரர் மகான் நபிகள் நாயகம் அவர்கள் என்றார். மேலும் கூறினார் நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று! சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு! நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார்! அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
வாஷிங்டன் இர்விங் என்ற அறிஞசர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ‘ஒருவனே தேவன்’ என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமைக் கொண்டாடிய முஹம்மது நபிஅவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
டாக்டர் அம்பேத்கார் என்ற அறிஞர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்