5) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

180

5) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- ஸாலிஹ் (ஸலஹ்)

 

♦️பிறப்பு :- கிமு. 2150

 

♦️தந்தை பெயர் :- காபூக்

 

♦️தாய் பெயர் :- ஜகூமு

 

♦️சமூகம் :- ஹிஜ்ர் வாசிகள் என்றும், சமூது கூட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பு :- நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த தமூத் என்ற கூட்டத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள்.

 

♦️நபித்துவம் :- 40 வயதில்

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️தொழில் :- ஒட்டகம் மேய்த்தல், வியாபாரம்

 

♦️அரசனின் பெயர் :- ஜுன்தாஹ்

 

♦️அத்தாட்சி :- பாறையை பிளந்து மிக பெரிய பெண் ஓட்டகை ஒன்றை அல்லாஹ் அத்தாட்சியாக அவர்களுக்கு அனுப்பி வைத்தான். அதன் நீளம் 120 முழம் அதன் அகலம் 100 முழமாகும்.

 

♦️சமூகத்தின் குற்றம் :- சமூது கூட்டத்திலுள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்து விட்டனர். அதற்கு அம்மக்கள் உடந்தையாக இருந்தார்கள்.

 

♦️இறைவனின் எச்சரிக்கை :- மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு, அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

 

♦️தன்டனை :- சொன்ன பிரகாரம் மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர்.

 

♦️ஆயுட்காலம் :- ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 180 அல்லது 200 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 2080

 

♦️கப்ரு :- நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஓமான் நாட்டிலுள்ள ஸல்ஸலா என்ற இடத்தில் அமைந்துள்ளது.

குறிப்பு :- நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஷவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரின் எல்லைக்குள் அமைந்துள்ளது என்றும். மற்றொரு கருத்தின் படி பலஸ்தீன் நாட்டிலுள்ள ரம்லா என்ற ஊரில் அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.

 

குர்ஆன் :- நபி ஸாலிஹ் ♦️அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 9 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.