5) முஸ்லீம்களின் பிறந்த நாளும் நபி முஹம்மத் ﷺ அவர்களின் வழிகாட்டலும்
முஸ்லீம்களின் பிறந்த நாளும் நபி முஹம்மத் ﷺ அவர்களின் வழிகாட்டலும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
எழுத்தாசிரியர் :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று கூறினார்கள். நாங்களா, யா ரஸுலல்லாஹ்! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள், ”வேறு யார்?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஸயித் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3456
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 4031
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆஷுரா நாளில் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹமது 2154 இப்னு ஹுஷைமா 2095
யூத நஸாராக்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்றும் பிறமத சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்றும் மூன்று விதமான மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
உதாரணமாக பிறந்த நாள் நஸாராக்கள் கொண்டாடுகிறார்கள்” முஸ்லிம்களும் கொண்டாடுகிறார்கள் என்றால்! இரண்டும் ஒன்றாகி விடுமா? இந்த அளவு கோலை வைத்து பார்த்தால்! யூத நஸாராக்கள் நவீன டவ்சர்” டீசட் போன்ற ஆடைகள் அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. இப்போது முஸ்லிம்கள் இவைகளை அணிந்தால் சட்டம் என்ன? இன்றைய காலகட்டத்தில் அதிகமான உடைகள்” உணவு பொருட்கள்” பாவனை பொருட்கள்” தொழில் இயந்திர கருவிகள்” மருத்துவ நவீன கருவிகள்” மருந்து மாத்திரைகள்” வாகனங்கள் இவையெல்லாம் மாற்றுமத யூத நஸாராக்கள் உருவாக்கியவை அவர்களின் கலாச்சாரத்தில் இவைகளும் நடைமுறையில் உள்ளது. இன்றைய நவீன முஸ்லிம்கள் மேற்கூறிய விடயங்களை நடைமுறை படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த அளவு கோலை வைத்து பார்க்கும் போது முஸ்லிம்கள் யூத நஸாராக்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பானவர்கள் என்று கூறலாமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இன்னும் சில உதாரணங்கள் மற்று மதத்தவர்களுக்கும் வணக்கஸ்தலம் உண்டு முஸ்லிம்களும் வணக்கஸ்தலம் உண்டு. மாற்று மதத்தவர்களுக்கும் பெருநாள் உண்டு முஸ்லிம்களுக்கும் பெருநாள் உண்டு. மாற்று மதத்தவர்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு முஸ்லிம்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு. மாற்று மதத்தவர்கள் கங்கை நீரை பரக்கத்தாக குடிக்கிறார்கள் முஸ்லிம்கள் ஜம்ஜம் நீரை பரக்கத்தாக குடிக்கிறார்கள். மாற்று மதத்தவர்கள் கோயிலை வலம் வருகிறார்கள் முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருகிறார்கள். மாற்று மதத்தவர்கள் சாமி சிலைகளை முத்தமிடுகிறார்கள் முஸ்லிம்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுகிறார்கள். மாற்று மதத்தவர்கள் பல நாடுகளில் இருந்து பலனி மலை ராமேஸ்வரம் செல்கிறார்கள் முஸ்லிம்கள் ஹஜ்ஜிக்கு செல்கிறார்கள். மாற்று மதத்தவர்கள் அங்கு சென்று மொட்டை அடிக்கிறார்கள் முஸ்லிம்கள் ஹஜ்ஜிக்கு சென்று மொட்டை அடிக்கிறார்கள். இவ்வாறு பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகமுடியும். சற்று சிந்தித்துப் பாருங்கள் இவ்வாறான காரணங்களை வைத்து ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அனைத்தும் மாற்று மதங்களுக்கு ஒப்பானவை என்று கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடையர்களாகும்.
இது போன்ற மடயர்கள் தான் பிறந்த நாள் மட்டுமின்றி தர்ஹா” மௌலிது போன்ற விடயங்களில் இது போன்ற சில ஒப்பீடு உதாரணங்களை வைத்துக் கொண்டும் ஊலையிட்டுக் கொண்டும் ஆலிம் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். உன்மையில் மேற்கூறிய ஹதீஸில் என்ன கூறப்படுகிறது என்பதை சற்று சுருக்கமாக பார்க்கலாம்.
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! முஸ்லிம் மக்களிடையே ஒரு செயல் நடைபெறுகிறது அந்த செயல் யூத நஸாராக்களின் கலாச்சாரமாக இருக்கிறது. அந்த செயல் கலாச்சாரம் திருக்குர்ஆன் ஹதீஸிக்கு முறனாக இருக்கிறது. இவ்வாறான ஒரு செயலை முஸ்லிம் மக்கள் கடைபித்து வந்தால் அவர்கள் யூத நஸாரா கலாச்சாரத்திற்கு ஒப்பானவர்கள் என்று பொருள் கொள்ளப்படும். அது அல்லாமல் ஒரு செயல் முஸ்லிம் மக்களிடையே நடைபெறுகிறது அந்த செயல் திருக்குர்ஆன் ஹதீஸிக்கு நேர்படுகிறது இவ்வாறான ஒரு செயல் யூத நஸாராக்களின் கலாச்சாரமாக இருந்தாலும் சரி அவர்கள் செய்வது போன்று நாம் செய்யாமல் அதற்கு மாற்றாக திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையாக வைத்து நாம் அந்த செயலை செய்வதில் எவ்வித குற்றமும் இல்லை என்பதை மேற்கூறிய ஹதீஸ்களை மூலமாக வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
யூத நஸாராக்கள் பிறந்த நாள் கொண்டாடுவது வேறு முஸ்லிம்கள் பிறந்த நாள் கொண்டாடுவது வேறு. இஸ்லாத்தின் பார்வையில் பிறந்த நாள் என்பது இன்று தான் நான் பிறந்தேன் என்பதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை ஞாபகம் ஊட்டுவதாகும் மேலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பதாகும்.
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ
இல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கட்கிழமை தோறும் நோன்பு நோற்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் இது பற்றி ஸஹாபாக்கள் வினவிய போது இன்றைய நாளில் தான் நான் பிறந்தேன் என்பதாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- கதாதத அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1162 அபூ தாவூத் 2426 அஹ்மது 22550
பிறந்த அந்த நாளை ஞாபகம் ஊட்டுவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் நபிவழியாகும். மேலும் நபிவழிக்கு முறன் என்பதாக வாதிடுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடயர்கள் என்று பொருள் கொள்ளப்படும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! ஸலாமை பரப்புங்கள் (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1854, 2485 இப்னு மாஜா 1334, 3251, 3252 தாரமீ 1501, 2674 அஹ்மது 6450
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் நபிவழியாகும். மேலும் நபிவழிக்கு முறன் என்பதாக வாதிடுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடயர்கள் என்று பொருள் கொள்ளப்படும்.
குறிப்பு :- உலக முஸ்லிம்கள் இன்று தான் நான் பிறந்தேன் என்பதை வருடத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை ஞாபகம் ஊட்டுவது மட்டுமின்றி அந்த நாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவு வழங்குகிறார்கள். இதைத்தான் அவர்கள் பிறந்த நாள் என்பதாகக் கூறுகிறார்கள். இவையெல்லாம் நபிவழிக்கு முறனான வழிகேடு என்பதாகக் கூறுபவர்களும் யூத நஸாராக்களின் கலாச்சாரம் என்று அரைகுறையாக கூறுபவர்களும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் திருக்குர்ஆன் ஹதீஸ்களை ஒழுங்கு முறைப்படி படிக்காத வஹாபிஷ மடையர்கள் என்றே பொருள் கொள்ளப்படும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்