50) முஃமின்கள் கப்ரு தர்ஹாக்கள் விஷயத்தில் யூத நஸாராக்களுக்கு மாற்றம் செய்கிறார்கள்

429

50) முஃமின்கள் கப்ரு தர்ஹாக்கள் விஷயத்தில் யூத நஸாராக்களுக்கு மாற்றம் செய்கிறார்கள்

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆஷுரா நாளில் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹமது 2154 இப்னு ஹுசைமா 2095

 

ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்பதால் முஸ்லிம்கள் அந்த நாளில் நோன்பு நோற்கக்கூடாது என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவில்லை. அவர்கள் அஷுரா நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த நாளைக்கு முந்தைய நாள் அல்லது பிந்தைய நாளில் நோன்பு நோற்று மாற்று மதத்தவர்களுக்கு குறிப்பாக யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் அழகிய முறையில் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களை கடவுளாக கடவுளின் மகனாக முற்கடவுலில் ஒருவராக பார்க்கின்றார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களை அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற அடியார்களாக பார்க்கின்றார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணங்கி வழிபடும் நோக்கில் அதிக உயரமாக கட்டினார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை மரியாதை நிமித்தமாக அதன் உயரத்தை குறைத்து அடையாளமாகக் கட்டினார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணக்கத்தலாமாக எடுத்துக் கொண்டார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை அடையாளச் சின்னமாக எடுத்துக் கொண்டார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களின் மேல் மஸ்ஜித் வணக்கத்தலத்தை எழுப்பி அதனை வணங்கி வழிபட்டார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அருகில் மஸ்ஜித் பள்ளிவாசல்களை அமைத்து அல்லாஹ்வை வணங்கி வழிபட்டார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணங்கும் நோக்கில் அதனை சுற்றி வலம் வந்தார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை சுற்றி வலம் வருவதை தடை செய்தார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு சுஜூது செய்தார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு சுஜூது செய்வதை தடை செய்தார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களை வணங்கி வழிபட்டு அதன் மூலம் வஸீலா உதவி தேடினார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்கள் என்ற நோக்கில் அவர்களை முன்நிறுத்தி வஸீலா உதவி தேடினார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களிடம் வணங்கும் நோக்கில் நேரடியாக உதவி தேடினார்கள். முஃமின்கள் மனிதர் என்ற நோக்கிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றவர்கள் என்ற நோக்கிலும் நபிமார்கள் நல்லடியார்களிடம் நேரடியாக உதவி தேடினார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை வணங்கி வழிபடும் நோக்கில் பிரயாணம் செய்கிறார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை ஸியாரத்து செய்யும் நோக்கில் பயணம் செய்கிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களை வணங்கி வழிபடுவது மட்டுமின்றி அவர்களால் சுயமாக எதுவும் செய்ய முடியும் என்று நம்புகின்றனர். முஃமின்கள் வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே. மேலும் நபிமார்கள் நல்லடியார்கள் அல்லாஹ்வின் படைப்புக்களே அன்றி வேறில்லை அவர்களுக்கு சுய சக்தி கிடையாது என்கின்றனர்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை முன்வைத்து நேர்ச்சை செய்வார்கள். முஃமின்கள் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்து அதன் நன்மைகளை நபிமார்கள் நல்லடியார்களுக்கு சேர்த்து வைப்பார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் நபிமார்கள் நல்லடியார்களின் பெயர்கூறி அறுத்து பழியிடுவார்கள். முஃமின்கள் அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து பழியிட்டு அதனை நபிமார்கள் நல்லடியார்களின் பெயரில் அன்னதானம் செய்வார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் வழிபாட்டு தலங்களில் வணங்கும் நோக்கில் கொடி ஏற்றுகிறார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினமாக ஓர் அடையாளமாக கொடி ஏற்றுகிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் தேர் எனும் குன்டத்தில் சிலைகளை வைத்து வணங்கும் நோக்கில் இழுத்து செல்கிறார்கள். முஃமின்கள் இந்தியா போன்ற சில நாடுகளில் நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினமாக ஓர் அடையாளமாக சந்தனக்கூடு இழுத்து செல்கிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் அவர்களின் கடவுள் கற்சிலைகள் நன்மைகளை அள்ளித்தரும் என்ற நோக்கில் விழா எடுக்கிறார்கள். முஃமின்கள் நபிமார்கள் நல்லடியார்களின் நினைவு தினமாக அவர்களை ஞாபகப்படுத்தி அவர்களுடைய பெயரில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுத்து அதன் நன்மைகளை அவர்களுக்கு சேர்த்து வைக்கிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் அன்னதானம் கொடுக்க முன்னர் அவர்களின் கடவுள்களுக்கு அதனை படைத்து விட்டு கொடுக்கிறார்கள். முஃமின்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடிய வண்ணம் அன்னதானம் கொடுக்கிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் வழிபாட்டுத்தலங்களில் சிலைகளை வணங்கி வழிபடும் நோக்கில் சாம்ராணி புகை பிடிக்கிறார்கள். முஃமின்கள் மஸ்ஜிதுகளிலும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தனங்கள் அது அல்லாத இடங்களிலும் மனத் திரவியமாக அத்தர், பன்னீர், சாம்ராணி, சந்தனக்குச்சி, சந்தனம், புஹூர், அம்பர் போன்ற மணமான பொருட்களை மக்கள் நுகர்ந்து கொள்வதற்காக வேண்டி பயன் படுத்துகிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் கற்சிலைகளை வணங்கும் நோக்கில் போர்வை போற்றுகிறார்கள். முஃமின்கள் கஃபா மற்றும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு கண்ணியம் என்ற நோக்கில் போர்வை போற்றுகிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் வணங்கும் நோக்கில் கற்சிலைகளை தொட்டு கும்பிடுகிறார்கள். முஃமின்கள் கஃபா மற்றும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை கண்ணியமான இடங்கள் என்ற நோக்கில் முத்தமிடுகிறார்கள். திருக்குர்ஆன் ஹதீஸ் நூல்களை கண்ணியம் கறுதி முத்தமிடுகிறார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்களின் வணக்கத்தலங்களிலும் விழாக்களிலும் சர்வ சாதாரணமாக ஆண்கள் பெண்கள் இரண்டரை கழக்கின்றாரகள். முஃமின்கள் மஸ்ஜிதுகளிலும் மீலாது கந்தூரி விழாக்களிலும் ஆண்கள் பெண்கள் இரண்டரை கழப்பதை முடிந்த வரை முற்றாக தடுக்கின்றார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்களின் வணக்கத்தலங்களில் நடனம் நாட்டியம் கச்சேரி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. முஃமின்கள் மஸ்ஜிதுகளிலும் கந்தூரி விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் நடனம் நாட்டியம் கச்சேரி போன்ற நிகழ்வுகளை முற்றாக தடுத்து வருகின்றார்கள்.

 

♦️மாற்று மதத்தவர்கள் கற்சிலைகளை நிற்க வைத்தும் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் அது அல்லாத இடங்களில் உற்கார வைத்தும் கல்லறைகளில் படுக்கவைத்தும் வணங்குகின்றார்கள். முஃமின்கள் ஒவ்வொரு வஸ்துக்களிலும் சூழ்ந்தவனாக இருக்கும் இறைவனை உள்ளத்தால் அறிந்து வணங்குகின்றாரகள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.