52) வன்முறையும் போர்முனையும்
வன்முறையும் போர்முனையும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
போர்க்குணங்களையும் வன்முறைகளையும் முற்றாக ஒழித்து விடுங்கள்
عَنْ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எதிகளை சந்திப்பதில் ஆசைப்படாதீர்கள்,அல்லாஹ்விடம் ஆரோக்கியத் தையே! கேளுங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அவ்ப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2966 முஸ்லிம் 1742
எதிரிகளுடன் போர் செய்வதாக இருந்தாலும் முறைப்படி போர் செய்யுங்கள்
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ إِنِّي مِنَ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَلَا نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ وَلَا نَنْتَهِبَ وَلَا نَعْصِيَ بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.
அறிவிப்பவர் :- உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3893 முஸ்லிம் 1709
பெயர்களில் கூட வன்முறையான வார்த்தைகள் வருவதை விரும்பாதீர்கள்
عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلَقْحَةٍ تُحْلَبُ مَنْ يَحْلُبُ هَذِهِ؟ فَقَامَ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اسْمُكَ؟ فَقَالَ لَهُ الرَّجُلُ مُرَّةُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْلِسْ ثُمَّ قَالَ مَنْ يَحْلُبُ هَذِهِ؟ فَقَامَ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اسْمُكَ؟ فَقَالَ حَرْبٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْلِسْ ثُمَّ قَالَ مَنْ يَحْلُبُ هَذِهِ؟ فَقَامَ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اسْمُكَ؟ فَقَالَ يَعِيشُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْلُبْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் பால் கறக்கும் பொருப்பை யார் ஏற்கிறீர்கள்? என வினவிய போது ஒருவர் எழுந்தார். உம் பெயர் என்ன? என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது என் பெயர் முர்ரா (கசப்பு) என அம்மனிதர் கூறினார், உடனே அவரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்காரச்சொன்னார்கள். (மீண்டும் கேட்டார்கள்) யார் ஒட்டகத்தில் பால் கறக்கிறீர்கள்? மற்றொருவர் எழுந்தார், அவரிடம் உம் பெயர் என்னவென்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது அவர் ஹர்ப் (போர்) என்று கூறினார் அவரையும் உட்காரச்சொன்னார்கள். மூன்றாவது முறையாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது, இப்போது ஒருவர் எழுந்தார், அவரின் பெயரை கேட்டபோது யஈஷ் என்றார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அப்பணிக்கு நியமித்தார்கள்.
அறிவிப்பவர் :- யஹ்யா இப்னு ஸ்மித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஅத்தா 2789
போர்க்களத்தில் கூட நீங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள்
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ تِلْكَ الْمَغَازِي فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடைவிதித்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1744 தாரமீ 2505
போர்க்களத்தில் கூட நீங்கள் வயோதிபர்களையும் சிறுவர்களையும் கொலை செய்யாதீர்கள்
عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَلَا تَقْتُلُوا شَيْخًا فَانِيًا وَلَا طِفْلًا وَلَا صَغِيرًا وَلَا امْرَأَةً
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (போர்க்களத்தில்) முதியோர்களை கொலை செய்ய வேண்டாம், குழந்தைகளையும், சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2614
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்