53) மற்றுமதமும் மனிதநேயமும்

119

மற்றுமதமும் மனிதநேயமும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

வற்புறுத்தி மதமாற்றம் செய்யாதீர்கள்

 

لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இறைவேதம் கூறுகிறது இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகி விட்டது.

 

அறிவிப்பு :- திருக்குர்ஆன் 2:256

 

மாற்று மதத்தினர்களுக்கு ஏசாதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آذَى ذِمِّيًّا فَأَنَا خَصْمُهُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அன்னிய மதத்தை சார்ந்தவர்களை துன்புறுத்தியவனுக்கு எதிராக (மறுமையில்) நான் வாதிடுவேன்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரீஹ் பஃதாதி 4426

 

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் மரணித்து சடலமாக சென்றாலும் எழுந்து நின்று மரியாதை செய்யுங்கள்

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَرَّ بِنَا جَنَازَةٌ فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ قَالَ إِذَا رَأَيْتُمُ الْجِنَازَةَ فَقُومُوا

 

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் ‘ யா ரஸூலல்லாஹ்! இது ஒரு யூதனின் ஜனாஸா’ என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1311, நஸாயி 1922

 

மாற்று மதத்தினர்களிலுள்ள எதிரிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் நன்மையை நாடுங்கள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ؟ قَالَ لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلَالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ فَنَادَانِي فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ فَقَالَ ذَلِكَ فِيمَا شِئْتَ إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الْأَخْشَبَيْنِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلَابِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا

 

(ஒரு முறை) நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது ஸலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3231 முஸ்லிம் 1795

 

மாற்று மதத்தினர்களாக இருந்தாலும் சரி அவர்களுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى خَيْبَرَ الْيَهُودَ عَلَى أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا خَرَجَ مِنْهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப்பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிடவேண்டும்)’ என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2173

 

மாற்று மதத்தினர்களின் உணர்வுகளை காயப்படுத்தி விடாதீர்கள்

 

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இறைவேதம் நபியே! நீங்கள் கூறுங்கள்) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.

 

அறிவிப்பு :- திருக்குர்ஆன் 109 : 6

 

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை மாற்று மதத்தினர்களாக இருந்தாலும் சரி அவர்களின் கடவுள்களுக்கு திட்டாதீர்கள்

 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّـهِ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இறைவேதம் கூறுகிறது மாற்று மதத்த)வர்கள் (வணங்கி) அழைக்கும் அல்லாஹ் அல்லாத (பிறமத கடவுள்களை) நீங்கள் திட்டாதீர்கள்.

 

அறிவிப்பு :- திருக்குர்ஆன் 6 : 108

 

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை மாற்று மதத்தினர்களை கொலை செய்யாதீர்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் ஒப்பந்தம் செய்து கொண்டு இஸ்லாமிய நாட்டில் வசிப்பவரை கொலை செய்வாரோ அவர் சுவனத்தின் வாடையை கூட நுகர மாட்டார் அதன் வாடையை பல்லாண்டு பயண தூரத்தில் தான் பெற்றுக் கொள்ளப் படும்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2946

 

மாற்று மதத்தினர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தால் மஸ்ஜிதுகளை நாடினால்! அவர்களை விரட்டி விடாதீர்கள்

 

عَنْ محمد بن جعفر بن الزبير قال‏ أن وفد نجران وهم من النصارى لما قدموا على الرَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالمدينة دخلُوا عليه مسجدَه بعد صلاة العصر فكانت صلاتُهم فقاموا يُصَلُّون في مسجده فأراد الناسُ منعهم فقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ ‏دَعُوهُم‏‏ فاسْتَقْبَلُوا المَشْرِقَ فَصَلَّوا صَلاَتَهُمْ‏

 

நஜ்ரான் தேசத்து கிருஸ்துவக்கூட்டம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து விவாதம் செய்ய மதீனா வந்தபோது அது அஸர் தொழுகையின் நேரம் என்பதால் மஸ்ஜித் நபவியில் தங்களின் வணக்கத்தை நிறை வேற்ற அனுமதி கேட்டனர். அதனை “தடுக்க முனைந்த தம் தோழர்களை தடுத்துவிட்டு” அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் தங்களின் வணக்கத்தை நிறைவேற்றட்டும் என்றார்கள். கிழக்கு திசையை முன்னோக்கி அவர்கள் தங்களின் மதவழிபாட்டை செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் ஸீரத் 3/235

 

மாற்று மதத்தினர்கள் அவர்களுடைய தலைவனை உயர்த்தி பேசும் உரிமை அவர்களுக்கு உண்டு. அச்சமயம் அவர்களுடன் நீதியாக நடந்து கொள்ளுங்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَبَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ، فَقَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْعَالَمِينَ فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ فَرَفَعَ الْمُسْلِمُ عِنْدَ ذَلِكَ يَدَهُ فَلَطَمَ الْيَهُودِيَّ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَقَالَ لَا تُخَيِّرُونِي عَلَى مُوسَى فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ الْعَرْشِ فَلَا أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ

 

முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் (ஒருவரோடொருவர்) சச்சரவிட்டார்கள். அந்த முஸ்லிம், ‘அகிலத்தார் அனைவரை விடவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (சிறந்தவராக்கித்) தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘அகிலத்தார் அனைவரை விடவும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை (சிறந்தவராகத்) தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார். (யூதரின்) இச்சொல்லைக் கேட்டபோது அந்த முஸ்லிம் தம் கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே, அந்த யூதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்த, தன்னுடைய விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்த முஸ்லிமை கண்டித்தது மிட்டுமின்றி) ‘மூஸாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் . ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நானே மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா, அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3408

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.