54) சாந்தி சமாதானத்தின் தீர்க்கதர்சி இறைதூதர் ﷺ வஸல்லம் அவர்களின் நற்போதனைகளை போன்ற அவர்களின் வாழ்க்கையும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதர்சி இறைதூதர் ﷺ வஸல்லம் அவர்களின் நற்போதனைகளை போன்ற அவர்களின் வாழ்க்கையும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
மக்களிலேயே மிக அழகிய நற்குணங்கள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِك رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணங்கள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 6203, திர்மிதி 2015
இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசாதவர்களாக இருந்தார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே’ என்று அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3559 அஹ்மது 6504
கடுகடுப்பானவர் அல்ல, கல் நெஞ்சுக்காரரும் அல்ல, கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்ல. தீங்கிழைப்பவர்களை பண்ணிப்பவர்களாக இருந்தார்கள்
أَنَّهُ لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلَا صَخَّابًا فِي الْأَسْوَاقِ وَلَا يَجْزِي بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ
(அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்களை முந்தைய வேதங்களில் நான் பார்த்திருக்கிறேன்) அதில் காணப்படுவதாவது அவர்கள் கடுகடுப்பானவர் அல்லர். கல் நெஞ்சுக்காரரும் அல்லர். கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் அவர் தீர்வு காண மாட்டார்கள். மாறாக (அதை) மன்னிப்பார்கள் விட்டுக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2125 தப்ஸீர் இப்னு கஸீர், அஹ்மது” முஸ்னத் 2/174
உறவை பேணியும், ஏழைகளுக்காக உழைத்தும், விருந்தாளிகளை உபசரித்தும், உதவி புரிந்தும் வாழ்ந்து காட்டினார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَتْ خَدِيجَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِى الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ
கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (நாயகமே!) “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3, அஹ்மது 14287
தனக்கு தீங்கிழைத்தோர்களை மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடும் மனப்பான்மை கொண்டவர்கள்
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ قَالَ أَجَلْ….وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ
அதாஉ இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள்; நான், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து தவ்ராத் வேதத்திலுள்ள இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்பைப்பற்றி எனக்கு தாங்கள் கூறுங்களேன்? என்று சொன்னேன். அதற்கவர்கள், ஆம்! (கூறுகிறேன்.) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தீமைக்குப் பகரமாக தீமையைச் செய்யமாட்டார்கள். மாறாக அவர்கள் மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்’ எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அதாஉ இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹ் ஆதாரம் புஹாரி 2125
ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6 முஸ்லிம் 2308
அறியாமை காலத்தில் நடந்த அட்டூழியங்களை அடியோடு அளித்தார்கள்
عَنْ جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ … أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2334
சிறைக்கைதிகளுக்கு அநியாயம் செய்யவில்லை, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள்
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ ثَقِيفُ حُلَفَاءَ لِبَنِى عُقَيْلٍ فَأَسَرَتْ ثَقِيفُ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَسَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي عُقَيْلٍ وَأَصَابُوا مَعَهُ الْعَضْبَاءَ فَأَتَى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْوَثَاقِ قَالَ يَا مُحَمَّدُ فَأَتَاهُ فَقَالَ مَا شَأْنُكَ فَقَالَ بِمَ أَخَذْتَنِي وَبِمَ أَخَذْتَ سَابِقَةَ الْحَاجِّ فَقَالَ إِعْظَامًا لِذَلِكَ أَخَذْتُكَ بِجَرِيرَةِ حُلَفَائِكَ ثَقِيفَ ثُمَّ انْصَرَفَ عَنْهُ فَنَادَاهُ فَقَالَ يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَقِيقًا فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ مَا شَأْنُكَ؟ قَالَ إِنِّي مُسْلِمٌ قَالَ لَوْ قُلْتَهَا وَأَنْتَ تَمْلِكُ أَمْرَكَ أَفْلَحْتَ كُلَّ الْفَلَاحِ ثُمَّ انْصَرَفَ فَنَادَاهُ فَقَالَ يَا مُحَمَّدُ يَا مُحَمَّدُ فَأَتَاهُ فَقَالَ مَا شَأْنُكَ؟ قَالَ إِنِّي جَائِعٌ فَأَطْعِمْنِي وَظَمْآنُ فَأَسْقِنِي قَالَ هَذِهِ حَاجَتُكَ فَفُدِيَ بِالرَّجُلَيْنِ
ஸகீஃப் குலத்தார், பனூ உகைல் குலத்தாருக்கு நட்புக் குலத்தினராய் இருந்தனர். இந்நிலையில் ஸகீஃப் குலத்தார் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் இருவரை சிறைபிடித்துச் சென்றனர். (பதிலுக்கு) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் பனூ உகைல் குலத்தாரில் ஒருவரை சிறைபிடித்து வந்தனர். அவருடன் “அல் அள்பா” எனும் ஒட்டகத்தையும் பிடித்துக்கொண்டு வந்தனர். அந்தக் கைதி கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அவர், “முஹம்மதே!” என்று அழைத்தார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் வந்து, “(என்ன விஷயம்) உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “ஏன் என்னை (சிறை) பிடித்தீர்கள்? ஹாஜிகளை முந்திச் செல்லும் (“அள்பா”) ஒட்டகத்தையும் ஏன் பிடித்தீர்கள்?” என்று கேட்டார். (அவருக்கு மதிப்புக் கொடுத்து) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உன்னுடைய நட்புக் குலத்தார் “ஸகீஃப்” செய்த குற்றத்திற்காகவே உன்னைச் சிறைபிடித்தேன்” என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார்கள்.
பிறகு (மீண்டும்) அவர் “முஹம்மதே! முஹம்மதே!” என்று அழைத்தார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரக்கமும் கருணையும் உடையவராக விளங்கினார்கள். எனவே, அவரிடம் திரும்பிவந்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “நான் ஒரு முஸ்லிம்” என்றார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அவர் உண்மையிலேயே முஸ்லிமாகவில்லை என்பதை அறிந்து) “நீ (சிறை பிடிக்கப்படுவதற்கு முன்) சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் இருந்தபோது, இதை நீ சொல்லியிருந்தால் முழு வெற்றி பெற்றிருப்பாய் (சிறைபிடிக்கப்பட்டிருக்கமாட்டாய்)” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (மறுபடியும்) அவர், “முஹம்மதே! முஹம்மதே!” என்று அழைத்தார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் வந்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் “நான் பசியுடன் இருக்கிறேன். எனக்கு உணவளியுங்கள். தாகத்துடன் இருக்கிறேன். தண்ணீர் புகட்டுங்கள்” என்று கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இது உன் (அடிப்படைத்) தேவை. (இதை நாம் நிறைவேற்றுவோம்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 3117
தமக்காக எதிலும் யாரையும் ஒரு பேதும் அவர்கள் பழிவாங்க முற்பட்டது கிடையாது
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ قَطُّ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ قَطُّ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ فَيَنْتَقِمَ بِهَا لِلَّهِ
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கம் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5688
பணியாளர்களை நோக்கி மனம் வேதனைப்படும்படி ச்சீ என்ற வார்த்தையை கூட பயண் படுத்தாதவர்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ وَاللَّهِ مَا قَالَ لِي أُفًّا قَطُّ وَلَا قَالَ لِي لِشَيْءٍ لِمَ فَعَلْتَ كَذَا وَهَلَّا فَعَلْتَ كَذَا
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) “ச்சீ” என்றோ “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4279
பணியாளர்களை எதிர்த்து பேசாத, எந்த ஒரு குறையும் கூறாத ஓர் தலைசிறந்த தலைவராக இருந்தார்கள்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ فَمَا أَعْلَمُهُ قَالَ لِي قَطُّ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا وَلَا عَابَ عَلَيَّ شَيْئًا قَطُّ
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் 4278
பேரிச்சம் நாறினால் பதனிடப்பட்ட பாயை தன் படுக்கை விரிப்பாக பயன் படுத்தினார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا قَالَتْ كَانَ فِرَاشُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِن أدمٍ حَشْوُهُ لِيفٌ
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
அரிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 6456
பேரிச்சம் நாறினால் பதனிடப்பட்ட பாயில் அவர்கள் படுத்தால், அவர்களில் உடலில் பாய் அடையாளம் பதியும் அளவுக்கு எளிமையாக வாழ்ந்து காட்டினார்கள்
قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ فَسَلَّمْتُ عَلَيْهِ
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கம் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் (உடல்) விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன்
அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 4914
பசியின் வேதனையை அனுபவித்தார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ ارْزُقْ آلَ مُحَمَّدٍ قُوتًا
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வே! முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6006
போர் கவசங்களை அடமானம் வைத்து தன் குடும்பத்தினர்களுக்கு உணவளித்துள்ளார்கள்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ مَشَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لِأَهْلِهِ وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ مَا أَمْسَى عِنْدَ آلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعُ بُرٍّ وَلَا صَاعُ حَبٍّ وَإِنَّ عِنْدَهُ لَتِسْعَ نِسْوَةٍ
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் போர் கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடமானமாக வைத்து அவரிடமிருந்து தம் குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். அந்த யூதன் சொன்னான் ‘(முஹம்மத்) அவர்களிடத்தில் ஒன்பது மனைவியர் இருக்கும் நிலையில் கூட.’முஹம்மதின் குடும்பத்தினரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாவு, பிற தானியத்தில் ஒரு ஸாவு இருந்ததில்லை.’ என்று கூறினான்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2069
வருமையின் உச்சகட்டத்தில் வாழ்ந்து வந்தார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا قالت مَا شَبعَ آلُ مُحمَّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتَّى قُبِضَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் மரணிக்கும் வரை, அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 5684
வீட்டில் வேலை செய்வது மட்டுமின்றி கிழிந்த ஆடைகளையும் அறுந்த பாதணியையும் தானே தைத்து கொள்வார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا سُئِلَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ كَانَ يَخِيطُ ثَوْبَهُ وَيَخْصِفُ نَعْلَهُ وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرِّجَالُ فِي بُيُوتِهِمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீடுகளில் என்ன வேலை செய்வார்கள் என்று வினவியபோது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள், தங்களது கிழிந்த ஆடைகளையும், அறுந்த செறுப்பையும் தாங்களே தைத்து சரி செய்து கொள்வார்கள். மேலும் ஆண்கள் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 24339
தன் மனைவியர்களுக்கும், தன் பணியாளர்களுக்கும், அது அல்லாத எவர்களுக்கும் அநியாயமாக அடிக்க மாட்டார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ خَادِمًا لَهُ قَطُّ وَلَا امْرَأَةً وَلَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ شَيْئًا قَطُّ إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கரத்தால் எந்த மனைவியையும், எந்த பணியாளரையும் அடித்ததில்லை. எந்த ஒன்றுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடித்ததில்லை. போர்க்களத்திலேயே தவிர
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அஹ்மது 25375
அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் இருந்தார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ وَأَبْيَضَ يُسْتَسْقَى الغَمَامُ بِوَجْهِهِ … ثِمَالُ اليَتَامَى عِصْمَةٌ لِلْأَرَامِلِ
(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகிய) இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்’ என்று அபூ தாலிப் அவர்கள் பாடிய கவிதையை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்தாள்பவராக இருந்தனர்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு தீனார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1008
நோய் விசாரிக்க ஏழைகளின் வீட்டுக்கு நடந்து செல்பவர்களாக இருந்தார்கள்
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلاَ بِرْذَوْنٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (நான் நேயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறி கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.)
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5664
செல்வத்தில் மூழ்கி இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் தனக்கென்று எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்தார்கள், அவர்களிடம் இருந்த கழுதையும் போர் கவனத்தையும் மரணத்தின் போது தர்மம் செய்தார்கள்
عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ خَتَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الحَارِثِ قَالَ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மரணத்தின் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோவிட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
அறிவிப்பவர் :- ஜுவைரிய்யா பின்தி ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 2614
சமுதாயம் செய்யும் தவறுகளுக்காக வேண்டி இறைவனிடம் ஒவ்வொரு தொழுகையிலும் பாவமன்னிப்பு தேடினார்கள், இச்சமுகத்தை அதிகம் நேசித்தார்கள்
عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ لَمَّا رَأَيْتُ مِنَ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ طِيبَ النَّفْسِ قُلْتُ يَا رَسُولَ اللهِ، ادْعُ الله لِي قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهَا وَمَا تَأَخَّرَ وَمَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ فَضَحِكَتْ عَائِشَةُ حَتَّى سَقَطَ رَأْسُهَا فِي حِجْرِ رَسُولِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الضَّحِكِ فَقَالَ أَيَسُرُّكِ دُعَائِي فَقَالَتْ وَمَا لِي لا يَسُرُّنِي دُعَاؤُكَ فَقَالَ وَاللهِ إِنَّهَا لَدَعْوَتِي لأُمَّتِي فِي كُلِّ صَلاة
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனமகிழ்வுடன் இருப்பதை கண்ட நான் யா ரஸூலல்லாஹ்! எனக்காக பிரச்சினை செய்யுங்கள் என்றேன். அதற்கவர்கள். இறைவா! ஆயிஷாவின் முன் பின் தவறுகளையும், அவள் இரகசியமாகவும், பரகசியமாகவும் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! என்று கூறினார்கள். அப்போது நான் என் தலை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் விழும் அளவிற்கு சிரித்தேன். அப்போது அவர்கள் என்னிடம் என் பிரார்த்தனை உமக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? என்று கேட்க, அதற்கு நான் உங்களது பிரார்த்தனை எனக்கு மகிழ்ச்சியளிக்காமல் இருக்குமா என்ன? என்று கூறினேன். அதற்கவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமா அந்த எனது பிரார்த்தனை என் சமூகத்திற்காக ஒவ்வொரு தொழுகையிலும் நான் கேட்கும் பிரார்த்தனையாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு ஹிப்பான் 7110
தன் துனைவியை தவிர வேறெந்த பெண்ணையும் அவர்கள் தொட்டதில்லை
عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ… قَالَتْ: «وَمَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அஹ்மது 25198
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதப் புனிதனமாக மாறுவதற்கும் அல்லாஹ் இறைதூதர்களை உலகத்திற்கு அனுப்பி வைத்தான். அந்த இறைதூதர்களில் முத்தாய்ப்பாக அந்த இறைதூதர்களுக் கெல்லாம் தலைவராக சர்தார் முஹம்மதுவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அவர்களது வாழ்வின் அத்தனை விஷயங்களும். அவர்கள் மக்களுக்கு செய்த உபதேசங்களும் நற்போதனைகளும் மனித சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது. அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நடுநிலையாக யோசியுங்கள். ஏழையாக பிறந்தவர்கள், அனாதையாக வளர்ந்தவர்கள், பல இன்னல்களை சந்தித்தவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், எழுத படிக்க தெரியாத நிலையில் இருந்தவர்கள், மடமையுடைய காலத்தில் பிறந்து வாழ்ந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கிறார்கள். மதவெறி வேண்டாம், இணவெறி வேண்டாம், கொள்கை வெறி வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம், துன்புறுத்தல் வேண்டாம், வற்புறுத்தல் வேண்டாம், அடக்குமுறை வேண்டாம், நாம் ஒன்றும் செல்வந்தர்களுக்கு அடிமைகள் அல்ல சுதந்திரமானவர்கள், நல்லதை சொல்லுங்கள், நல்லதை செய்யுங்கள், தீயவற்றை தடுங்கள், அநியாயம் அட்டூழியம் செய்ய நாம் ஒன்றும் வழிகெட்ட ஷைத்தான்கள் கிடையாது, ஈவிரக்கம் இன்றி மனித தன்மை இன்றி அப்பாவி மக்களின் உரிமைகளை பரித்து அவர்களை கொலை செய்ய நாம் ஒன்றும் மிருகங்கள் கிடையாது. ஆண்டவன், அளியாதவன், ஆட்சி செய்பவன், அடக்கி ஆள்பவன், அல்லாஹ் ஒருவனே! அவனை தவிர வேறு இறைவன் கிடையாது, அவனை தவிர வேறெந்த ஒன்றுக்கும் சக்தி கிடையாது. கண்களுக்கு தென்படும் ஒவ்வொன்றும் அழிந்து போகக்கூடியது, அளியாதன் ஒருவனே அவனே கடவுள், அத்தகைய கடவுள் உன்னை உருவாக்கியவனே தவிர நீங்கள் உருவாக்கிய ஒன்று எக்காலத்திலும் கடவுளாக இருக்க முடியாது என்ற ஏகத்துவ போதனைகளை மக்களுக்கு உறக்கச் சொன்ன மாமனிதர், வழிதவறிச் சென்றவர்களை நேர்வழி படுத்திய இறைதூதர், சாந்தி சமாதானமான இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்திற்கே போதித்த உத்தமத்தூதர் சர்தார் முஹம்மதுவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே! இஸ்லாமிய சமுகம் பின்தொடர்ந்தது செல்கிறது என்ற கசப்பான உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அநியாயம் அட்டூழியம் பெருகி வருகின்றன, மதவெறி, இனவெறி, ஜாதிவறி, கொல்கைவெறி அரங்கேறி விட்டன. அப்பாவி முஸ்லிம்கள் அது அல்லாதவர்கள், சிறுபான்மையினர், ஏழை எளியவர்கள், அப்பாவி பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள், சிறுமிகள் என்று பாகுபாடு இன்றி ஆட்சி அதிகாரம் ஆணவம் என்ற பெயரிலும் கற்பழிப்பு அநியாயம் அட்டூழியம் செய்து வதைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர், அதிகமானோர் செத்து மடிந்து விட்டனர். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இது போன்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை பற்றிப் பிடித்து கொள்ளுங்கள், அவர்கள் வகுத்த இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள். இவ்வுலகில் நடக்கும் அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் இதுவே சிறந்த தீர்வாகும். இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்கிய மார்க்கம் அல்ல, தீவிரவாதிகளை அழித்து அதில் சாந்தி சமாதான கொடியை நிலைநாட்டிய மார்க்கம் என்பதை நாம் உங்களுக்கு ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். இந்நூலில் உள்ள இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்போதனைகளை, அவர்கள் நடைமுறை படுத்திய சட்டதிட்டங்களை மறுக்கவோ மறைக்கவோ எவராலும் முடியாது. இச்சிறு நூலில் கூறப்பட்டவைகளை தானும் கற்று பிறர்களுக்கும் கற்றுக் கொடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ : – صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
(யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ (அத்தகைய சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் இமாம்கள்) (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை . சூரா பாதிஹா ஆயத் 6,7
பிடிவாதம் என்பது ஓர் பயங்கரமான நோயாகும். அந்த நோயால் பாதிக்கப்பட்ட எவரும் வெற்றி பெற வில்லை. நபிவழி எவ்வழியோ நாமும் அவ்வழியே. யா அல்லாஹ்! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் போதனைகளை குறைகூறுவது மிட்டுமின்றி தவறான முறையில் பேசி அவர்களையும் அவர்களை பின்தொடர்ந்தது செல்பவர்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையே அழிக்க முற்படுகிறார்கள். அத்தகையவர்களை விட்டும் எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் பூரா முஸ்லிம்கள் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஸல்லல்லாஹு அலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முகம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி காதிரி, யா சைஹு யா ரிபாய்)
வெளியீடு :- மூதூர் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்.
Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
உன்மையை சொல்கிறோம், சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம், அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இச்சிறு நூலில் கூறப்பட்டவைகளை கூர்ந்து கவனியுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்தது என்ன? அவர்கள் என்னென்ன உபதேசங்கள் செய்தார்கள்? என்பதையெல்லாம் சர்வ சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இச்சிறு நூலில் நபிமொழி ஆதார எண்களுடன் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இதனை தானும் கற்று பிறர்களுக்கும் கற்றுக் கொடுங்கள். மனித வாழ்வில் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அத்தனை துறைகளிலும் சாந்தி சமாதானத்தின் தீர்க்கதர்சி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியும் நற்போதனைகளும் இடம் பெற்றிருக்கும். இவ்வுலகில் அரங்கேறி வரும் அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபதேசங்களே! சிறந்த தீர்வாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்