தராவீஹ் தொழுகையின் துஆ
தராவீஹ் தொழுகையின் துஆ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ, اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ، وَفِى الْاٰخِرَةِ رَاغِبيْنَ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ,اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْن ,اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ
ஸலாத்தும் ஸலாமும் எங்கள் நாயகம் முகம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்கள் அனைவர்களின் மீதும் உண்டாவதாக! எங்கள் அல்லாஹுவே! பூரண ஈமானுல்லவர்களாக எங்களை நீ ஆக்கி வைப்பாயாக. நீ எங்கள் மீது விதித்த கடமைகளை நிறை வேற்றுபவர்களாகவும், தொழுகைகளைப் பேணியவர்களாகவும் ஜக்காத்தைக் கொடுத்தவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! உன்னிடத்திலுள்ள பாக்கியங்களை வேண்டுகிறவர்களாகவும், நீ எங்களை மன்னிப்பதை ஆதரவு வைப்பைவர்களாகவும், உனது நேர்வழியை இருக்கப் பிடிப்பவர்களாகவும், வீணான காரியங்களைப் புறக்கணிப்பவர்களாகவும், எங்களை ஆக்கியருள்வாயாக! இவ்வுலக வாழ்க்கையில் பற்றற்றவர்களாகவும், மறுமை வாழ்க்கையில் ஆர்வமுள்ளவர்களாகவும், (களா) விதியைப் பொருதியவர்களாகவும் உனது அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர்களாகவும், சோதனையில் பொறுமையாளர்களாகவும், எங்களை ஆக்கி அருள் புரிவாயாக! உன்னுடைய தோழரும், உன்னுடைய நபியும் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உமது ரசூலுமான எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய (லிவாஉல் ஹம்து) என்ற கொடியின் கீழ் இறுதி நாளில் ஒதுங்கியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள் புரிவாயாக! மறுமையில் ஹவ்ழுல் கவ்ஸர் என்ற தடாகத்தின் அருகில் வருபவர்களாகவும், சுவனபதியின் ஸீன்த்துஸ் இஸ்தப்ரக் என்னும் ஆடைகளை அணிபவர்களாகவும், கூருஈன்களை மணப்பவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்புரிவாயாக! நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் ஆகிய உன்பேரருளைப் பெற்றவர்களுடன் சுவனபதியின் ஆகாரத்தை அருந்துபவர்களாகவும், தெளிவான தேன் பாலை குவலைகளால் பெற்று அருந்தியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள் புரிவாயாக! அல்லாஹ்வே! சிறப்புமிக்க இந்த மாதத்தில் உன்னால் அங்கீகரிக்கப் பெற்ற நற்பாக்கியவான்களுடன் எங்களை நீ சேர்த்து அருள் புரிவாயாக! அல்லாஹ்வே! அல்லாஹ்வே! அல்லாஹ்வே! உன்னால் விரட்டி அடிக்கப்பட்ட துர்பக்கியவான்களுடன் எங்களை நீ சேர்த்து விடாதே! அல்லாஹ்வே! ரமலானுடைய ஒவ்வொரு இரவிலும் நரகத்திலிருந்து உரிமை விடுதலையளிக்கப்பட்டவர்களும், அதன் விடப்பட்டவர்களும், திடுக்கத்திலிருந்து அபயமளிக்கப்பட்டவர்களும், அதன் துன்பங்களிலிருந்து நீக்கி விடப்பட்டவர்களும் உன்னிடம் இருக்கிறார்கள். அல்லாஹ்வே! நரகத்தை விட்டு உரிமை விடப்பட்டவர்களும், விடுதலையளிக்கப்பட்டவர்களும், அதன் திடுக்கத்திலிருந்து அபயமளிக்கப்பட்டவர்களும், அதன் துன்பங்களிலிருந்து நீக்கி விடப்பட்டவர்களுமான நல்லோர்களின் கூட்டத்தில் எங்களை சேர்த்தருள் புரிவாயாக! கேள்வி கணக்கு கேட்கும் அந்த நாளில் எங்களையும் எங்கள் தாய் தந்தையார்களையும் மன்னிக்க அருள் பரிவாயாக!
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்