6) அல்லாஹ்விற்கு இரு கண்கள் உள்ளதா?
அல்லாஹ்விற்கு (இரு) கண்கள் உள்ளதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا بَصِيْرًا
குர்ஆன் கூறுகிறது எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
சூரா நிஸா ஆயத் 134
அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான் என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் சில படைப்பினங்கள் ஒரு பொருளை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் இருத்தல் வேண்டும். அதேபோன்று இன்னும் சில படைப்பினங்கள் உள்ளது. அவைகள் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் உள்ள ஓர் கல்லை நான் நன்கு அறிவேன் நான் நபியாக அனுப்ப படுவதற்கு முன்னரே அந்த கல் எனக்கு ஸலாம் சொல்லி கொண்டு இருந்தது அதை இப்பொழுதும் பார்க்கிறேன்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2277 திர்மிதி 3441
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு அந்த கல்லை பார்க்கிறார்களோ அதே போன்று அந்த கல்லும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து ஸலாம் கூறுகிறது என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஹதீஸை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே சர்வ சாதாரணமாக இருக்கக்கூடிய கற்கள் பார்க்கிறது ஆனால் அதற்கு கண்கள் இல்லாத போது சர்வ படைப்பிணங்களை படைத்த அல்லாஹ் பார்க்கிறான் என்றால் அவனுக்கு கண்கள் இருக்க வேண்டிய எந்தவித அவசியம் இல்லை. நாம் உருவ வணங்கிகள் போன்று அல்லாஹ்விற்கு கண்கள் இருக்கிறது என்று உருவம் கற்பிக்க முற்படுவது முற்றிலும் தவறாகும்.
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ : إِنِّي لَأُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ أَنْذَرَهُ قَوْمَهُ وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிய பின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கிறேன். இறைத்தூதர்கள் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல’ என்றார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6745
தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல’ என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து அல்லாஹ்விற்கு பல கண்கள் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. ஆகவே மேற்கூறப்பட்ட ஹதீஸிக்கு நேரடி அர்த்தம் வைப்பது முற்றிலும் தவறாகும். அதற்கு மாற்றமாக தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் என்பதன் அர்த்தம் தஜ்ஜால் குறையுள்ளவன் என்று இகழப்படுகிறது. அதுபோல நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதன் அர்த்தம் அல்லாஹ் குறையுள்ளவன் அல்ல என்று புகழப்படுகிறது. என்று மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அதாவது தஜ்ஜால் குறையுள்ளவன் என்றும் அல்லாஹ் குறையுள்ளவன் அல்ல என்றும் வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஹதீஸிக்கு சரியான அர்த்தம் :- தஜ்ஜால் ஒற்றைக் கண்ணன் குறையுள்ளவன்; நிச்சயமாக அல்லாஹ் குறையுள்ளவன் அல்ல. அவன் அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்து அறிபவனாக இருக்கிறான். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்