6) கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஸலாம் கூறுவதும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும்
6) கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஸலாம் கூறுவதும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ وَفِي رِوَايَةِ زُهَيْرٍ السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ، أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு, அவர்கள் கப்ருஸ்தானங்களுக்குச் செல்லும் போது கூற வேண்டியதைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களில் ஒருவர் (பின்வருமாறு) கூறினார்கள். (அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபிய்யா) கப்ருஸ்தானங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நாம் அல்லாஹ் நாடினால் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன். என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்ததாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- புரைதா இப்னு அல்ஹஸீப் அல்அஸ்லமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 975 இப்னு மாஜா 1547 நஸாயி 2040 அஹ்மது 22985
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُولِي السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
நான் யா ரஸுலல்லாஹ்! கப்ருகளில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், (அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வயர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் ல லாஹிகூன்) கப்ருகளிலுள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம் என்று சொல் என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 974, நஸாயி 2037, அஹ்மது 25855
♦️ஆரம்ப ஹதீஸில் கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துக்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்றும் மற்ற ஹதீஸில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது. ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆக்களை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் இறைவன் பகீஉ என்ற மையவாடிக்கு சென்று (கப்ருவாசி)களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 974, அஹ்மது 25855
♦️பொது மய்யவாடிகளிலுள்ள கப்ருகளை ஸியாரத் செய்வது மட்டுமின்றி கப்ருவாசிகளுக்காக வேண்டி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்பது இறைவனின் இறைகட்டளை என்பதை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلامُ عَلَيْكُمْ يَا أَهْلَ القُبُورِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை ஸியாரத்து செய்ய சென்றால் (பின்வருமாறு) கூறுங்கள் (அஸ்ஸலாமு அலைக்கும் யா அஃலல் குபூர்) கப்ரு வாசிகளே உங்கள் மீது ஸலாம் உண்டவதாக என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1053
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
(ஒரு முறை) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று (பின்வருமாறு) கூறுவார்கள். (அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன்) கப்ருகளிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 249, அபூ தாவூத் 3237
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ، فَيَقُولُ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்.(மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள். (அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்) இந்த கப்ருஸ்தானங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 974
♦️பொது மைய்யவாடிகளிலுள்ள கப்ருகளை ஸியாரத் செய்ய சென்றால்! ஆரம்பத்தில் அவர்களை அழைத்து ஸலாம் கூறவேண்டும், அவர்களுடன் எந்தெந்த முறையில் பேச வேண்டும், அவர்களுகாக துஆ கேட்க வேண்டும் என்ற கருத்துக்களையெல்லாம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கூறிய ஹதீஸ்கள் மூலம் நமக்கு தெளிவு படுத்தியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்