6) குறைகளை மறைப்பதும் மன்னிப்பதும்
குறைகளை மறைப்பதும் மன்னிப்பதும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
மற்ற மனிதர்களின் குறைகளை மறையுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَتَرَ مُسْلِما سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் ஒரு முஸ்லிமுக்கு(ரிய குறைகளை) மறைப்பாரோ அவருக்கு(ரிய குறைகளை) இவ்வுலகத்திலும், மறுமையிலும் அல்லாஹ் மறைப்பான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2442 முஸ்லிம் 2580, அபூதாவூத் 4893 திர்மிதி 1426
மற்ற மனிதர்களின் பிழைகளை மன்னியுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் ஒரு முஸ்லிமுடைய பிழைகளை மன்னித்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாரோ அவருடைய பிழைகளை மறுமை நாளில் அல்லாஹ் மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 3460 இப்னு மாஜா 2199 அஹ்மத் 7431
எதிரியாக இருந்தாலும் மன்னியுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مُوْسَي بْنُ عِمْرَانَ يَارَبِّ! مَنْ اَعَزُّ عِبَادِكَ عِنْدَكَ؟ قاَلَ مَنْ اِذَا قَدَرَ غَفَرَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) மூஸா இப்னு இம்ரான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் எனது இரட்சகனே, உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் கண்ணியத்துக்குரியவர் யார்?’ எனக் கேட்டார்கள். “பழி வாங்க சக்தியிருந்தும் மன்னித்து விட்டவர் தான் என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” ஷுஃபுல் ஈமான் 6/319 மிஷ்காத் 5120
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்