6) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்து கொள்ளும் போது இறைதூதர் ﷺ அவர்கள் வயோதிப தன்மையை அடைந்திருந்தார்களா?

102

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِالطَّوِيلِ البَائِنِ وَلاَ بِالقَصِيرِ وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ وَلَيْسَ بِالْآدَمِ وَلَيْسَ بِالْجَعْدِ القَطَطِ وَلاَ بِالسَّبْطِ بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ فَتَوَفَّاهُ اللَّهُ وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை, குட்டையானவர்களாகவும் இல்லை, சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை, மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை, (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை, நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தம் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா “மதீனா” நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலும் அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்தான்.

நூல் ஆதாரம் :- புஹாரி 3387

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் வயது 63 ஆகும். இந்த வயதில் கூட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளமை போன்ற உருவ அமைப்பில் தான் இருந்தார்கள். அவர்களின் தலை முடி மற்றும் தாடி முடிகளில் 20 வெள்ளை நிற முடி கூட நரைத்த முடி இருக்கவில்லை என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறுபத்தி மூன்று வயதில் நோயின் காரணமாகவே மரணம் அடைந்தார்கள். அந்த நேரத்தில் கூட அவர்கள் வழிமை மிக்கவர்களாகவும், இளமை தோற்றத்தில் காணப்பட்டார்கள். மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடிக்கும் போது அவர்களின் வயது ஐம்பத்தி நான்காகும். ஆக அந்த நேரத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளமையுடைய தோற்றத்தில் இருந்தது மட்டுமின்றி பல எதிரிகள் முன் வந்தாலும் அவர்களை எதிர்த்து முன் நின்று போர் செய்யும் வீரமும், தைரியமும், வலிமையும், விவேகமுடையவர்களாகவும். பல போர்களை அந்த வயதில் சந்தித்த போர் வீரர்களாகவும் இருந்தார்கள். இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போன்று திருமணம் முடிக்க முடியாத வயோதிப தன்மையில் அவர்கள் அந்த நேரத்திலும் சரி அது அல்லாத நேரங்களிலும் சரி குறிப்பாக அவர்கள் மரணிக்கும் நேரத்திலும் சரி வயோதிப தன்மையில் அவர்கள் இருக்கவில்லை என்ற நற்செய்திகள் இஸ்லாமிய வரலாற்று நூல்களிலும் ஹதீஸ் கிரந்தங்களிலும் அதிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.