6) ஜலாலுதீன் ரூமி (ரஹ்) அவர்களின் தத்துவக் கவிதைகள்

95

   நீ பூரணமானவன்    என்று உனக்குத் தோன்றலாம் உன்னைப் பூரணப்படுத்தும் ஆன்மாவை நீ சந்திக்கும் வரை நீ குறையானவனே

சிறு பிள்ளை போல் சிணுங்குவதை நிறுத்து, பரவசத்தில் இயங்கும் பிரபஞ்சம் நீ

உனது செயலே, உன் நேசத்தின் அழகாய் அமையட்டும்.”

அன்பில் சூரியனைப் போன்றிரு நட்பில் சகோதரத்துவத்தில் நதி போன்றிரு குறைகளை மறைப்பதில் இரவு போன்றிரு பணிவில் மணல் போன்றிரு

உன்னிடம் அதிகம் இருந்தால் செல்வத்தை கொடு, குறைவாய் இருந்தால் இதயத்தை கொடு

சகோதரா.. நீ என்பது சிந்தனை மட்டும் தான் எலும்புகளும் தோளும் உன்னிடம் எஞ்சப் போவதில்லை

காலவட்டத்தை விட்டு வெளியே வா. அன்பு வட்டத்தினுள் நுழைந்து கொள். அன்பு எதனைத் தொட்டாலும் புனிதமாகிவிடும்.

பல மனிதர்களை பார்க்கிறேன் அவர்கள் மேல் ஆடை இல்லை. பல ஆடைகளை பார்க்கிறேன் அவர்களுக்குள் மனிதம் இல்லை.

தன்மீதான அன்பை நிரூபித்து கொண்டே இருக்க வேண்டுமென நினைப்பது பெண்களின் மோசமான உளவியல்….

கதவுகள் திறக்கப்பட்டிருந்தும் இன்னும் சிறைகளுக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

வார்த்தையேயில்லா ஓசை கவனி” ஒன்று கேட்கிறது.

இந்த உலகம் ஒரு கனவு ஆனால் உறக்கத்தில் இருப்பவர்கள் அதை நிஜம் என்று என்னிக்கொள்கிறார்கள்

நரைக்காத எப்போதும் நீடித்திருக்கிற ஒரே அழகு உள்ளத்தின் அழகுதான்!

வானம் முழுதும் ஒளி வீசும் நிலவு, உன் அறைக்குள் வெளிச்சம் தருவது உன் ஜன்னலை எவ்வளவு திறந்து வைத்திருக்கிறாய் என்பதை பொருத்தே…

காதலியே யாவுமாவாள் காதலன் ஒரு திரையேயன்றி வேறல்ல காதலிதான் ஜீவன் காதலன் உயிரற்ற ஜடமே

காதலிக்கு அவன் மீது பற்றில்லாவிடின் அவன் சிறகில்லாத பறவைதான்; அந்தோ அவன் நிலை பரிதாபத்துக்குரியதன்றோ

என் காதலியின் வெளிச்சம் எனக்கு முன்னாலும் பின்னாலும் இல்லாமல் இருக்கும்

நிலையில் முன்-பின் பற்றிய தன்னுணர்வு எனக்கு இருப்பதெங்கனம்? இந்த வார்த்தை வெளியாக்கப்பட வேண்டும் என்று காதலின் சித்தத்தில் எண்ணமுண்டாகி விட்டது. கண்ணாடி பிரதிபலிக்காவிடில் அது எப்படி கண்ணாடியாகும்? ஆத்மாவின் கண்ணாடி எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதையும் நீ அறிவாயா? அதன் முகத்தின் மீதுள்ள துரு அகற்றப்பட்டதுதான் அதன் காரணம்.

ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

தொடர்….

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.