6) நபி முஹம்மத் ﷺ அவர்களின் உருவ அமைப்பில் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

139

நபி முஹம்மத் ﷺ அவர்களின் உருவ அமைப்பில் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

 

عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّى أَبُو بَكْرٍ  رَضِيَ اللَّهُ عَنْهُ العَصْرَ ثُمَّ خَرَجَ يَمْشِي فَرَأَى  الحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ وَقَالَ بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ لاَ شَبِيهٌ بِعَلِيٍّ وَعَلِيٌّ يَضْحَكُ

 

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே, அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, ‘என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒத்திருக்கிறாய்; (உன் தந்தை) அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒத்திருக்கவில்லை’ என்று கூறினார்கள். அப்போது அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- உக்பா இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3542, 3750 அஹ்மது 40

 

 عَنْ أَبِي جُحَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ يُشْبِهُهُ

 

நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் (தோற்றத்தில்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருக்கிறார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஜுஹைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3543 முஸ்லிம் 2343 திர்மிதி 2827, 3777

 

عَنْ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ بْنُ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلاَمُ يُشْبِهُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்திருக்கிறேன். அலீயின் மகன் ஹஸன் அவர்கள் அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி பொழிவதாக! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இஸ்மாயீல் இப்னு அபூ காலித் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 3544 அஹ்மது 18748

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.