6) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து பிரயாணத்தின் போது மௌலிது கவி பாடல்கள்

274

6) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து பிரயாணத்தின் போது மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَسِرْنَا لَيْلًا، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لِعَامِرٍ : يَا عَامِرُ، أَلَا تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ؟ وَكَانَ عَامِرٌ رَجُلًا شَاعِرًا فَنَزَلَ يَحْدُو بِالْقَوْمِ يَقُولُ اللَّهُمَّ لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا فَاغْفِرْ فِدَاءً لَكَ مَا أَبْقَيْنَا وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّا إِذَا صِيحَ بِنَا أَبَيْنَا وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَذَا السَّائِقُ؟ قَالُوا عَامِرُ بْنُ الْأَكْوَعِ قَالَ يَرْحَمُهُ اللَّهُ

 

நாங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் ஆமிர் இப்னு அக்வஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். ‘இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)’ என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘யார் இந்த ஒட்டகவோட்டி? என்று கேட்டார்கள். ஆமிர் இப்னு அக்வஃ’ என்று மக்கள் சொன்ன சமயத்தில் ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸலமா இப்னு அக்வஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4196. முஸ்லிம் 1802 நஸாயி 3150

 

عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَادٍ، يُقَالُ لَهُ أَنْجَشَةُ. وَكَانَ حَسَنَ الصَّوْتِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، لَا تَكْسِرِ الْقَوَارِيرَ قَالَ قَتَادَةُ : يَعْنِي ضَعَفَةَ النِّسَاءِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அன்ஜஷா’ என்றழைக்கப்பட்ட ‘கவிபாடி ஒட்டகமோட்டுபவர்’ ஒருவர் இருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டவராக இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அன்ஜஷா! நிதானம்! கண்ணாடிக் குடுவைகளை உடைத்து விடாதே!’ என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். மென்மையான பெண்களைக் கருத்தில் கொண்டே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (கண்ணாடிக் குடுவைகள் என்று) கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6211. முஸ்லிம் 2323 தாரமீ ‌2743 அஹ்மது 12041

 

♦️பிரயாணத்தின் போது மௌலிது கவி பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.