6) ஸஹாபாக்கள் கொண்டாடிய மீலாதுன் நபி விழாவும் அதன் சிறப்புகளும்

356

ஸஹாபாக்கள் கொண்டாடிய மீலாதுன் நபி விழாவும் அதன் சிறப்புகளும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻬﻤﺎ ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻳﺤﺪﺙ ﺫﺍﺕ ﻳﻮﻡ ﻓﻰ ﺑﻴﺘﻪ ﻭﻗﺎﺋﻊ ﻭﻻﺩﺗﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻘﻮﻡ ﻓﻴﺴﺘﺒﺸﺮﻭﻥ ﻭﻳﺤﻤﺪﻭﻥ ﺍﻟﻠﻪ ﻭﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻴﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺎﺫﺍ ﺟﺎﺀ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺣﻠﺖ ﻟﻜﻢ ﺷﻔﺎﻋﺘﻰ

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவளுடைய வீட்டிலே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி அந்த கூட்டத்திற்கு மத்தியில் பேசியது மட்டுமின்றி அதன் மூலம் அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள், அவர்களை புகழ்ந்தார்கள், அவர்கள் மீது ஸலவாத்து கூறினார்கள், அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது அவர்கள் கூறினார்கள். என்னுடைய (ஷபாஅத்) பரிந்துரை உங்களுக்கு கட்டாயம் ஆகி விட்டது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மாஹ் அல் பதாவா அல் அஸீஸிய்யா 210

 

عن ابى الدرداء رضى الله تعالى عنه انه مر مع النبى صلى الله عليه وسلم الى بيت عامر الانصارى وكان يعلم وقائع ولادته صلى الله عليه وسلم لأبنائه وعشيرته ويقول “هذا اليوم” “هذا اليوم” فقال عليه الصلوة والسلام ان الله فتح لك ابواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجى نجاتك

 

ஆமிருல் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வீட்டுக்கு அருகாமையால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் நடந்து சென்றார்கள். அச்சமயம் அவர்களுடைய வீட்டிலிருந்து ஓர் சத்தம் கேட்டது, அது ஆமிருல் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் பிள்ளைகளுக்கு மத்தியில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி சொல்லி விட்டு அது இன்றைய நாளில் தான் நடைபெற்றது அது இன்றைய நாளில் தான் நடைபெற்றது என்று அவர்கள் கூறினார்கள். அந்த நேரத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு இறைவன் ரஹ்மத்துடைய வாயல்களை திறந்து வைப்பானாக. அனைத்து மலக்குமார்களும் உங்களுக்காக வேண்டி இஸ்திஃபார் செய்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் செய்த இந்த வேலையை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்களும் உங்களைப் போன்று ஈடேட்டம் பெறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மாஹ் அல் பதாவா அல் அஸீஸிய்யா 210

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழாவை ஸஹாபாக்கள் தங்களுடைய வீடுகளில் கொண்டாடி உள்ளனர் என்றும் அவர்களுக்காக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்தது மட்டுமின்றி மறுமையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் ஷபாஅத் பரிந்துரை அவர்களுக்கு கிடைக்கும் என்ற நற்செய்தியையும் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

قال ابوبكر الصديق رضي الله عنه من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم كان رفيقي في الجنة

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் (மீலாதுன் நபி) மவ்லிதை ஓதுவதற்காக ஒரு “திர்ஹம்“ செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது “தோழராக“ இருப்பார்.

 

قال عمر بن خطاب رضي الله عنه من عظم مولد النبي صلي الله عليه وسلم فقد أحيا الاسلام

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாதுன் நபி) மவ்லிதை கண்ணியப்படுத்தியவர் இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்.

 

قال عثمان رضي الله عنه من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين

 

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாதுன் நபி) மவ்லிதை ஓதுவதற்காக ஒரு “திர்ஹம்“ செலவு செய்தவர் “பதுறு, உஹது“ போர்முனைகளில் கலந்து கொண்டவரைப் போலாவார்.

 

قال علي رضي الله عنه وكرم الله وجهه من عظم مولدالنبي صلي الله عليه وسلم وكان سببا لقرائته لايخرج من الدنيا الابالامان ويدخل الجنة بغير حساب

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமேனி பிறந்த தினத்தை கண்ணியப்படுத்தியவர், (மீலாதுன் நபி) மவ்லிதை ஓதக்கூடியவர் ஈமானுடன் மௌத்தாவார் சுவனத்தில் பிரவேசிப்பார்.

 

நூல் ஆதாரம் :- இப்னு ஹஜர் ஹைதமி அவர்களின் நிஃமத்துல் குப்ரா அலல் ஆலமி ஃபி மவ்லிதி ஸய்யிதி உலித ஆதம் 7/ 11 பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழாவை தங்களது வீடுகளில் அது அல்லாத இடங்களில் கொண்டாடுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தை இவ்வுலகில் பெற்றுக் கொள்வது மட்டுமின்றி மறுமையில் அவர்களின் மாபெரும் ஷபாஅத் பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நற்செய்தியை இங்கு நாம் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.