7) அல்லாஹ்விற்கு இரு காதுகள் உள்ளதா?
அல்லாஹ்விற்கு (இரு) காதுகள் உள்ளதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا اِنَّ اللّٰهَ سَمِيْعٌ بَصِيْرٌ
குர்ஆன் கூறுகிறது (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
சூரா முஜாதலா ஆயத் 1
♦️அல்லாஹ் செவியேற்பவனாக இருக்கிறான் என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் சில படைப்பினங்கள் ஏதாவது ஒரு சத்தத்தை செவியேற்க வேண்டும் என்றால் அதற்கு காதுகள் இருத்தல் வேண்டும். அதேபோன்று இன்னும் சில படைப்பினங்கள் உள்ளது. அவைகள் செவியேற்க வேண்டும் என்றால் அதற்கு காதுகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
குர்ஆன் கூறுகிறது எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடும் போது; “குன்” (நீ ஆகுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
சூரா யாஸீன் ஆயத் 82
♦️அல்லாஹ் ஒரு பொருளை படைக்க நாடினால் நீ ஆகுக எனக் கூறுவன் அந்த சத்தம் கேட்ட மருகணம் அது உருவாகிவிடும். இவைகளை காரணமாக வைத்து எல்லா படைப்புக்களுக்கும் காது உள்ளது என்று கூறலாமா? என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள். அல்லாஹ் ஒவ்வொரு படைப்புக்களையும் வெவ்வேறு கோணங்களில் படைத்துள்ளான். அவன் எந்த படைப்பை பார்த்து கூறினாலும் அப்படைப்பு காதுகள் இன்றி செவியேற்கும் என்றால் சர்வ படைப்பிணங்களை படைத்த அல்லாஹ் செவியேற்கிறான் என்றால் அவனுக்கு
காதுகள் இருக்க வேண்டிய எந்தவித அவசியம் இல்லை. நாம் உருவ வணங்கிகள் போன்று அல்லாஹ்விற்கு காதுகள் இருக்கிறது என்று உருவம் கற்பிக்க முற்படுவது முற்றிலும் தவறாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்