7) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இறைவன் இறைதூதர் ﷺ அவர்களுக்கு ஏன் மனைவியாக தேர்ந்தெடுக்க வேண்டும்?

132

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நான் ஆறு (அல்லது ஏழு) வயதுடையவளாய் இருந்த போது என்னை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (துனைவியாக) வாழ்ந்தேன்.

நூல் ஆதாரம் :- புஹாரி 5133

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறுவயதில் இருந்தே பணிவு, பக்குவம், அறிவின்மையுள்ள பெண்மணியாக திகழ்ந்தார்கள். மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திருமணம் முடித்த பின்னர், அவர்களின் அருகில் இருந்து ஒன்பது வருடங்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களை முழுமையாக கற்றுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்ந்த ஒன்பது வருடங்களில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள், பிக்ஹ் சட்டக்கலை, ஹதீஸ்கலைகளில் தனித்து விளங்கினார்கள். சுமார் 2210 ஹதீதுகளை அன்னை அவர்கள் மனனம் செய்து மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். அவை அனைததும் சட்டம் சார்ந்தவை என்பதால் அவர்கள் மரணிக்கும் வரை இஸ்லாமிய சட்டதிட்டங்களை இஸ்லாமிய்ய பெண்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்கள். இவர்களுக்கு அரபி மொழியில் சிறந்த புலமை இருந்தது. இவர்கள் சிறந்த கவிஞராகவும் மருத்துவத் துறையிலும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். ஏழைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கி வந்தார்கள். ஈகை, நற்செயல் புரிவதில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துணைவியார்களில் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குத் தனித்தோர் இடமுண்டு. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால் தான் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறுவயதிலையே இறைவன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு துனைவியாக தேர்ந்தெடுத்தான் என்ற நற்செய்தியை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் முக்கண் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் இச்சையை தீர்த்துக் கொள்ள ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்ய வில்லை. அப்படி அவர்கள் ஆசைப்படிருந்தால் அவர்கள் வாழ்ந்த ஒன்பது வருடங்களில் எப்படி 2210 ஹதீஸை மனனம் செய்ய முடியும்? மருத்துவ துறையில் அரபு மற்றும் கவிஞர் பேச்சு துறையில் இஸ்லாமிய சட்ட திட்டங்ளை மக்களுக்கு எத்துச் சொல்லும் ஓர் ஆசான எப்படி திகல முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆக இறைவன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கம் இஸ்லாமியர்களுக்கு அன்னை அவர்களின் மூலம் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் முழுமையாக பரவ வேண்டும் என்ற நோக்கமே அன்றி வேறில்லை.

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.