7) திருக்குர்ஆன் கூறும் நபிமார்கள் நல்லடியார்களின் மீலாது விழா

397

திருக்குர்ஆன் கூறும் நபிமார்கள் நல்லடியார்களின் மீலாது விழா

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

மீலாது என்பது பிறப்பை குறிக்கும், மீலாது விழா என்பது உரைநடையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நபிமார்கள் நல்லடியார்களின் பிறப்பு சிறப்பு அவர்களின் சரித்திரம் வரலாறுகளை புகழ்ந்து பேசுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களால் மீலாது விழா என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர்.

 

1) குர்ஆன் கூறும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழா

 

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே) அகிலத்தாருக்கு ரஹ்மத் அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம்.

சூரா அன்பியா ஆயத்107

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஹ்மத் அருட்கொடையாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் வெளிப்பட்ட நாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று கீழ் கானும் திருக்குர்ஆன் கூறுகிறது

 

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏

 

அல்லாஹ்வின் அருட்கொடையினாலும் அவனுடைய பெருங்கிருபையினாலும் அதனை அவர்கள் சந்தோஷித்து மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (செல்வங்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது” என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

சூரா யூனுஸ் ஆயத் 58

 

இந்த இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள (فضل) என்பது கல்வியை குறிக்கும் (رحمة) என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

 

ஆதாரம் :- சுயூத்தி” துர்ருல் மன்சூர் 3/308, இப்னு ஹய்யான்” பஹ்ருல் முஹீத்” தப்ஸீர் ஸஃதல் மஸீர் ஃபீ இல்முத் தப்ஸீர்

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு ரஹ்மத்தாக அல்லாஹ் அனுப்பி வைத்துள்ளான். மீலாதுன் நபி அவர்கள் பிறந்த அந்த நாள் ரஹ்மத் அருட்கொடை வெளிப்பட்ட நாள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

2) குர்ஆன் கூறும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீலாதுன் நபி விழா

 

وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏

 

குர்ஆன் கூறுகிறது அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

சூரா மர்யம் ஆயத் 15

 

وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏

 

குர்ஆன் கூறுகிறது நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும் (என்றும் அக்குழந்தை கூறியது).

சூரா மர்யம் ஆயத் 33

 

يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ اَلْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ

 

குர்ஆன் கூறுகிறது வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அன்றி, அவனுடைய (“குன்” என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கின்றார். அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான்.

சூரா நிஷா ஆயத் 171

 

3) குர்ஆன் கூறும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீலாதுன் நபி விழா

 

وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது (ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) நாம் மூஸாவின் தாயாருக்கு வஹி அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்! மேலும்

 

فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـــِٕيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள். மேலும்

 

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌ لَا تَقْتُلُوْهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள்.

 

وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰى فٰرِغًا‌ اِنْ كَادَتْ لَـتُبْدِىْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰى قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் என்னுடைய வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப் படுத்தியிருக்காவிடில், (மூஸா பிறந்திருக்கும் விஷயத்தை அனைவருக்கும்) அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.

சூரா கஸஸ் ஆயத் 7,8,9, 10

 

3) குர்ஆன் கூறும் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீலாதுன் நபி விழா

 

يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ‌ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ‏

 

(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) “யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.

சூரா மர்யம் ஆயத் 12

 

4) குர்ஆன் கூறும் நல்லடியார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீலாதுன் நபி விழா

 

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰى وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏

 

குர்ஆன் கூறுகிறது பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். மேலும்

 

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார்.

சூரா ஆல இம்ரான் ஆயத் 36, 37

 

மேற்கூறிய இறைவசனங்களை மூலாதாரமாக வைத்துப் பார்க்கும் போது முன் சென்ற நபிமார்கள் நல்லடியார்களின் பிறந்த நாளை ஞாபகம் ஊட்டியது மட்டுமின்றி அந்தப் பிறப்பின் சிறப்புக்களை இறைவேதம் திருக்குர்ஆன் மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கூறியுள்ளதை நம்மால் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ள முடிகிறது. இதைதான் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மீலாது விழா என்பதாகக் கூறுகின்றனர் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

நபிமார்கள் நல்லடியார்களின் சரித்திரங்கள் வரலாறுகளை உரைநடையில் புகழ்ந்து கூறும் திருக்குர்ஆன்

 

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன.

சூரா ஹூத் ஆயத் 120

 

لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.

சூரா யூசுப் ஆயத் 111

 

وَفِىْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏

 

குர்ஆன் கூறுகிறது மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது

சூரா தாரியாத் ஆயத் 38

 

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ‌ۘ

 

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள்.

சூரா யூனுஸ் ஆயத் 71

 

لَقَدْ كَانَ فِىْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيٰتٌ لِّـلسَّآٮِٕلِيْنَ‏

 

(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

சூரா யூசுப் ஆயத் 7

 

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ‌ۘ‏

 

(நபியே!) அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பியுங்கள்.

சூரா ஷுஃரா ஆயத் 69

 

اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْـكَهْفِ وَالرَّقِيْمِۙ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே! “அஸ்ஹாபுல் கஹ்ப்” என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.)

சூரா கஹ்ப் ஆயத் 9

 

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى‌‏

 

(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.

சூரா கஹ்ப் ஆயத் 9

 

وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا

 

(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். “அவருடைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீங்கள் கூறுங்கள்.

சூரா கஹ்ப் ஆயத் 83

 

كَذٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ مَا قَدْ سَبَقَ‌ وَقَدْ اٰتَيْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ‌ ‌ ‏

 

(நபியே!) இவ்வாறே உங்களுக்கு முன்னர் சென்று போனவர்களின் சரித்திரத்தை(ப் பின்னும்) நாம் உங்களுக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை (உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உங்களுக்கு அளித்தோம்.

சூரா தாஹா ஆயத் 99

 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் திருக்குர்ஆனில் அரைவாசி பகுதியே 25 நபிமார்களின் சரித்திர வரலாறுகளையும் நல்லடியார்களுடைய சரித்திர வரலாறுகளையும் இறைவன் உரைநடையில் புகழ்ந்து கூறியுள்ளான், இவைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் திருக்குர்ஆன் ஹதீஸ்களை முறைப்படி பார்த்தால் நாம் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ளலாம்.

 

குறிப்பு :- பிறந்த நாளை ஞாபகம் ஊட்டுவது திருக்குர்ஆனின் வழியாகும். மேலும் நபிமார்கள் நல்லடியார்களுடைய (பிறப்பை ஞாபகம் ஊட்டி) மக்களுக்கு அவர்களின் சரித்திர வரலாறுகளை சிறப்புக்களை மக்கள் மத்தியில் கூருவதும் திருக்குர்ஆனின் வழியாகும். இதைதான் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்கள் மீலாது விழா என்பதாகக் கூறுகிறார்கள் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.