7) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து வீடுகளில் கவி பாடல்கள்

285

7) நபி முஹம்மத் ﷺ அவர்களின் முன்னிலையில் வைத்து வீடுகளில் கவி பாடல்கள்

 

ﻋَﻦِ ﺍﻟﺮَّﺑِﻴْﻊِ ﺑِﻨْﺖِ ﻣَﻌُﻮْﺫِ رَضِيَ الله عَنْهَا ﻗَﺎﻟَﺖْ ﺩَﺧَﻞَ ﻋَﻠﻰَ ﺍﻟﻨَّﺒِﻲُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻏَﺪَﺍﺓَ ﺑُﻨِﻲَ ﻋَﻠَﻲّ ﻭَﺟُﻮَﻳْﺮِﻳَّﺎﺕٌ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺎﻟﺪَّﻑ ﻳَﻨْﺪُﺑْﻦَ ﻣَﻦْ ﻗُﺘِﻞَ ﻣِﻦْ ﺁﺑَﺎﺋِﻬِﻦَّ

 

எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் (வீடு) வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தப் ரபான் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அறிவிபாபவர் :- ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3700, திர்மிதி 1010, 4276

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلَالٌ، فَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الْحُمَّى يَقُولُ كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ وَكَانَ بِلَالٌ إِذَا أُقْلِعَ عَنْهُ الْحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يَقُولُ أَلَا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் மதீனாவிற்கு வந்து போது அபூ பக்கர் பிலால் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது, மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்! என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘மஜின்னா’ எனும் நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 1889, 5654 அஹ்மது 24360

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدُفَّيْنِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُنَّ فَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا

 

நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் (வீட்டில்) நுழைந்த போது என் அருகே இரண்டு சிறுமியர் தப் ரபான் அடித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விருவரையும் விரட்டினார்கள். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரையும் விட்டு விடுங்கள், (அவர்கள் பாடட்டும்) நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு என்பதாகக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் நஸாயி 1593 1597, அஹ்மது 24952

 

தங்களது வீடுகளில் மௌலிது கவி பாடல்களை பாடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஓர் விடயம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.