7) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

73

7) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- லூத் (லொட்)

 

♦️பிறப்பு :- கிமு.1950

 

♦️தந்தை பெயர் :- ஹாரான்

 

♦️பிள்ளைகள் :- ரிதா, ஜஹ்ரதா

 

♦️மனைவியர் :- வாலிஆ

 

♦️தொழில் :- விவசாயம்

 

♦️சமூகம் :- லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமூகம் வாழ்ந்த இடம் சதூம் நகரம் ஜோர்தான் சாக்கடலின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது.

 

♦️குற்றம் :- சதூம் நகரத்து மக்கள் வழிப்பறி கொல்லை, ஒரு ஆண் மற்றொரு ஆணுடனோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ ஜோடியாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 

♦️போதனை :- லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு பல கோணங்களில் உபதேசங்கள் செய்தும் அவர்கள் திருந்தவில்லை. அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் இரவோடு இரவாக திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறுமாறி விட்டார்கள். நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவியை தவிர.

 

♦️தன்டனை :- மறுநாள் அதிகாலை இறைவன் அவ்வூரை தோசையை போல் தலைகீழாக திருப்பி போட்டான். செங்கக் கற்கள் வானிலிருந்து அம்மக்கள் மீது மழையாய்ப் பொழிந்தன. அவ்வூர் மக்கள் அனைவரும் அழிந்து போனார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 1870

 

♦️கப்ரு :- நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள பனீ நயீம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 27 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.