செல்வந்தர்கள் பற்றிய சிந்தனை துளிகள்
5) செல்வந்தர்கள் பற்றிய சிந்தனை துளிகள்
ஏழைகளை பற்றி புகழ்ந்து பேசும் இஸ்லாம் செல்வந்தர்களை பற்றியும் புகழ்ந்து பேசுகிறது
ஆச்சரியமாக இருக்கிறதா……..?
செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வதில் குற்றமில்லை. அது ஏக இறைவனுக்கு விருப்பமான முறையில் அந்த வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும்.
தனது செல்வம் பிறர்க்களை அடக்கி ஆளும் ஆயுதமாக இருக்கக்கூடாது. பிறர்களின் பிரார்த்தனை துஆக்களை பெற்றுத் தரும் பொக்கிஷமாக இருத்தல் வேண்டும்.
ஏழை எளியவர்களுக்கும் யாசகம் கேட்பவர்களுக்கும் மீடியாக்களுக்கு முன் நிலையில் அதாவது வெளிப்படையில் வைத்து அள்ளிக் கொடுப்பதை விடவும் நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து நம்மால் முடிந்ததை நம்முடைய செல்வத்திலிருந்து அவர்களுக்கு கிள்ளிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
செல்வந்தர்களே! உங்களுக்கும் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம் என்றால் அவர்களிடம் நல்ல முறையில் சொல்லி அனுப்பி வையுங்கள். அவர்களது மனம் நோகும் படி தவறான முறையில் பேசி விடாதீர்கள். உங்கள் உள்ளங்களையும் சொத்து செல்வங்களையும் அல்லாஹ் நன்கறிந்தவன், அவனுக்கே அதில் அதிகளவில் அதிகாரம் உள்ளது என்பதை ஆழமாக மனதில் பதிந்த வண்ணம் நடுநிலையாக பேசுங்கள்.
குறிப்பு :- அநாதைகள், விதவைப் பெண்கள், ஏழை எளியவர்கள், மேலும் யாசகம் கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள். அது உங்களது தீய மரணத்தை தடுக்கும், உங்களது செல்வத்தை அதிகரிக்கும், மேலும் அல்லாஹ்வின் பார்வையில் நீங்களே (உயர்ந்த கை) உயர்ந்தவர்கள் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றுத் தரும் என்ற கருத்தை இஸ்லாம் பறைசாற்றுகிறது.