8) அல்லாஹ்விற்கு பேசும் வாய் உள்ளதா?
அல்லாஹ்விற்கு (பேசும்) வாய் உள்ளதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا
குர்ஆன் கூருகிறது இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
சூரா நிஸா ஆயத் 164
وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ
குர்ஆன் கூருகிறது நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்.
சூரா அஃராப் ஆயத் 143
♦️அல்லாஹ் பேசினான் என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் சில படைப்பினங்கள் ஏதாவது ஒன்றுடன் பேச வேண்டும் என்றால் அதற்கு வாய்கள் இருத்தல் வேண்டும். அதேபோன்று இன்னும் சில படைப்பினங்கள் உள்ளது. அவைகள் பேச வேண்டும் என்றால் அதற்கு வாய்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் உள்ள ஓர் கல்லை நான் நன்கு அறிவேன் நான் நபியாக அனுப்ப படுவதற்கு முன்னரே அந்த கல் எனக்கு ஸலாம் சொல்லி கொண்டு இருந்தது அதை இப்பொழுதும் பார்க்கிறேன்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2277 திர்மிதி 3441
♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கற்கள் ஸலாம் கூருகிறது என்று மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது இதேபோல் மறுமையில் வாயை தவிர ஏனைய உடல் உருப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் சாட்சி கூரும் பேசும் என்பதாக பல நபிமொழிகள் இடம் பெற்றுள்ளன. எனவே சர்வ சாதாரணமாக இருக்கக்கூடிய கற்கள் உடல் உருப்புக்கள் பேசுகிறது ஆனால் அதற்கு வாய்கள் இல்லாத போது சர்வ படைப்பிணங்களை படைத்த அல்லாஹ் பேசுகிறான் என்றால் அவனுக்கு வாய்கள் இருக்க வேண்டிய எந்தவித அவசியம் இல்லை. நாம் உருவ வணங்கிகள் போன்று அல்லாஹ்விற்கு வாய் இருக்கிறது என்று உருவம் கற்பிக்க முற்படுவது முற்றிலும் தவறாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்