8) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறுவயதில் இறைதூதர் ﷺ அவர்கள் திருமணம் முடித்தது போல் இஸ்லாமியர்களும் திருமணம் முடிக்க முடியுமா?  

134

 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ  قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 

நபியே! நிச்சயமாக நீங்கள் எவர்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்டீர்களோ அவர்களையும், அல்லாஹ் உங்களுக்கு (யுத்தத்தில்) அளித்து உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். உங்களது தந்தையின் சகோதரர்களின் பெண் மக்கள், உங்களது அத்தையின் பெண் மக்கள், உங்களது தாய்மாமனின் பெண் மக்கள், உங்களது தாயின் சகோதரியுடைய பெண் மக்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உங்களுடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். அன்றி) நம்பிக்கை கொண்ட யாதொரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். (நபியே!) இது சொந்தமாக உங்களுக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்று. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதனை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உங்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உங்களுக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை  உடையவனாகவும் இருக்கின்றான்.

வேத நூல் :- திருக்குர்ஆன் 33:50 

இஸ்லாமிய சட்டப்பிரகாரம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை ஆறு அல்லது ஏழு வயதில் திருமணம் செய்தது அன்றைய காலத்து நடைமுறை பிரகாரம். அதே போல் நான்குக்கு அதிகமாக திருமணம் செய்துள்ளார்கள், இதனை இஸ்லாம் அனுமதித்தது மட்டுமின்றி, இவைகளெல்லாம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தனிச் சிறப்புக்களில் உள்ளடங்கும். அது அல்லாத இஸ்லாமியர்களுக்கு இது போன்று திருமணம் செய்து கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

எனவே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருமண நிகழ்வுகள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்ற தனி சிறப்பாகும். திருக்குர்ஆன் 33:50 மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அன்றைய காலத்து நடைமுறை படி ஆறு அல்லது ஏழு வயதில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொண்டது போல் மற்ற முஸ்லிம்கள் இவ்வாறு திருமணம் முடிக்க முடியாது. மேலும் இஸ்லாமிய சட்டப்பிரகாம் ஆண் பெண் பிள்ளைகள் பருவ வயதை எத்திய பின்னர் அதாவது  அவர்கள் திருமண வயதை அடைந்த பின்னர்  தாராளமாக அவர்கள் திருமணம் செய்து திருமண பந்தத்தில் இணைய விரும்பினால் அவர்களுடைய பூரண அனுமதியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்ற கருத்தை இஸ்லாம் பறைசாற்றுகிறது.

உதாரணமாக இலங்கை இந்தியாவைப் போன்ற நாடுகளில் பதினொன்று அல்லது பதிமூன்று அல்லது அல்லது பதினைந்து வயதில் உங்கள் பெண் பிள்ளை பருவ வயதை எத்துகிறாள் என்றால்! அவர்கள் திருமண வயதை அடைந்து விட்டார்கள் என்று பொருள் கொள்ளப்படும். இவர்கள் திருமண வயதை அடைந்த போதிலும் அந்த பெண்களின் பூரண அனுமதி இல்லை என்றால்! அவர்களுக்கு வழுகட்டாயமாக திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மேலும் அவர்கள் இருபது அல்லது இருபத்தி மூன்று வயதில் தான் திருமணம் முடிக்க விரும்புகிறார்கள் என்றால்! அந்த வயதில் தான் அவர்களுக்கு திருமணம் முடித்து கொடுக்க வேண்டும். மேலும் இலங்கை இந்தியா நவீன சட்டப் பிரகாரம் பதினெட்டு அல்லது இருபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஓர் சட்டம் நடைமுறையில் இருந்தால் தாராளமாக நாட்டு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அந்த வயது எல்லையை அடைந்த பின்னர் அவர்களுக்கு திருமணம் முடித்து கொடுக்க வேண்டும்.

குறிப்பு :-  ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் முடித்தது போல் நான்குக்கு அதிகமாக திருமணம் முடிந்தது போல் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களும் இது போன்று திருமணம் முடிக்க முற்படுவத  முற்றிலும் தவறாகும். இவ்வாறு செய்வதை இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

WORLD ISLAM YSYR ✍️          அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.