8) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
8) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்
கலைஞர் கருணாநிதி என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மன வலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
ரவீந்திரநாத் தாகூர் என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தா நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ் என்னிடம் வார்த்தைகள் இல்லை.
மதுரை ஆதினகர்த்தர் என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.
நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீஸும். இஸ்லாத்தின் இணையற்ற இலட்சியப் பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும், மனிதன் அன்றட்ட வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றைக் கடமையாக்க முனைய வில்லை. கடைபிடிக்கும் நடைமுறை வழியில் கணிசமாகக் கடைபிடிக்க வலியுறுத்தியது. இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் தூண்டுகோலாகும்.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்