8) நபி முஹம்மத் ﷺ அவர்கள் இல்லாத நேரத்தில் ஸஹாபாக்கள் பாடிய மௌலிது கவி பாடல்கள்

390

8) நபி முஹம்மத் ﷺ அவர்கள் இல்லாத நேரத்தில் ஸஹாபாக்கள் பாடிய மௌலிது கவி பாடல்கள்

 

1) ஸஹாபாக்களின் காலத்தில் நல்லடியார்களை புகழ்ந்து மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ مَسْرُوقٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ، وَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ

 

(ஒருமுறை) நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (அதில் ஒன்று) ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட்ட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள் என்று பாடினார்கள்.

 

அறிவிப்பவர் :- மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4146. 4755, 4756, முஸ்லிம் 2488

 

2) ஸஹாபாக்கள் காலத்தில் திருமண நிகழ்வுகளில் மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ عَامِرِ بْنِ سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلْتُ عَلَى قَرَظَةَ بْنِ كَعْبٍ وَأَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ فِي عُرْسٍ وَإِذَا جَوَارٍ يُغَنِّينَ، فَقُلْتُ أَنْتُمَا صَاحِبَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِنْ أَهْلِ بَدْرٍ يُفْعَلُ هَذَا عِنْدَكُمْ؟ فَقَالَ اجْلِسْ إِنْ شِئْتَ فَاسْمَعْ مَعَنَا وَإِنْ شِئْتَ اذْهَبْ قَدْ رُخِّصَ لَنَا فِي اللَّهْوِ عِنْدَ الْعُرْسِ

 

ஒரு திருமண நிகழ்ச்சியின் போது இப்னு கஹ்ப் மற்றும் அபி மஸ்ஊத் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவர்களும் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் இரு சிறுமிகள் பாடிக் கொண்டிருக்கும் நிலையில் நான் சென்றேன். பின் நான் அவர்களைப் பார்த்து, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களே! பத்ருப் போர் கண்ட மாவீரர்களே! உங்கள் முன்னிலையில் இப்படி (நிகழ்ச்சி) நடக்கலாமா? என வினவிய போது. அதற்கு அவர்கள் நீ விரும்பினால் எங்களுடன் உட்கார்ந்து கேளும், விருப்பமில்லை எனில் போகலாம் என்று கூறி விட்டு, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அமர் இப்னு ஸஅது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 3383

 

3) ஸஹாபாக்கள் காலத்தில் மஸ்ஜிதுகளில் மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِيْ هُرَيْرَةَ فَقَالَ أَنْشُدُكَ اللهَ أَسَمِعْتَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ أَجِبْ عَنِّي اَللَّهُمَّ أَيِّدْهُ بِرُوْحِ الْقُدْسِ؟ قَالَ اَللَّهُمَّ نَعَمْ

 

ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மௌலிது) கவிபாடிக்கொண்டிருந்த பொழுது அவரை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடந்து சென்றார்கள். அப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். அதற்கு ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “(உமர் அவர்களே!) உம்மை விட மிகச் சிறந்த(நபிய)வர்கள் இந்தப்பள்ளியில் இருக்கும் போதே நான் (மௌலிது) கவிபாடியுள்ளேன் எனக்கூறி பின்பு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கம் திரும்பி “(அபூ ஹுரைராவே!) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், எனக்காக பதிலளித்து (மௌலிது) கவி பாடுங்கள்! யா அல்லாஹ்! பரிசுத்த உயிர் (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்) மூலம் இவரைப் பலப்படுத்துவாயாக!” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “யா அல்லாஹ்!, ஆம்!” என்றார்கள்.

 

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 3212 முஸ்லிம் 2485

 

4) பிரயாணத்தில் இருக்கும் போது மௌலிது கவி பாடல்கள்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ لَمَّا أَقْبَلَ يُرِيدُ الْإِسْلَامَ وَمَعَهُ غُلَامُهُ، ضَلَّ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ، فَأَقْبَلَ بَعْدَ ذَلِكَ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ هَذَا غُلَامُكَ قَدْ أَتَاكَ فَقَالَ أَمَا إِنِّي أُشْهِدُكَ أَنَّهُ حُرٌّ قَالَ فَهُوَ حِينَ يَقُولُ يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الْكُفْرِ نَجَّتِ

 

நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) நாங்கள் மாறிமாறி வழிதவறிச் சென்று விட்டோம். அதன் பிறகு, நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே ‘அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)’ என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான், ‘(யா ரஸூலல்லாஹ்!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்’ என்று கூறினேன். மேலும் (ஹிஜ்ரத் செய்து வரும் போது) பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே அவர் வந்தார். எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்து விட்டது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2530, அஹ்மது 7845

 

குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

 

Leave A Reply

Your email address will not be published.