8) நூரே முஹம்மதிய்யா எனும் ரஹ்மத் வெளிப்பட்ட தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் திருக்குர்ஆன்
நூரே முஹம்மதிய்யா எனும் ரஹ்மத் வெளிப்பட்ட தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் திருக்குர்ஆன்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
குர்ஆன் கூறுகிறது (நபியே) அகிலத்தாருக்கு (ரஹ்மத்) அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம்.
சூரா அன்பியா ஆயத்107
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பு இவ்வுலகிற்கு ரஹ்மத் அருட்கொடையாகும். அவைகளை கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமே? தவிர துக்கம் அனுஷ்டிக்க கூடாது என்ற கருத்தை திர்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது.
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் அருட்கொடையினாலும் அவனுடைய பெருங்கிருபையினாலும் அதனை அவர்கள் சந்தோஷித்து மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (செல்வங்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
சூரா யூனுஸ் ஆயத் 58
عن إبن عباس رضي الله عنهما في الآية قال : فضل الله العلم ورحمته محمد صلى الله عليه وسلم قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين”” الأنبياء الآية 107 ” الدر المنثور / للسيوطى ” إبن حيان فى تفسيره البحر المحيط ” وإبن الجوزى فى زاذ المسير فى علم التفسير كلهم عند تفسير الآيه 58
மேற்கூறிய இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள (فضل) பழ்ல் என்பது கல்வியை குறிக்கும் (رحمة) ரஹ்மத் என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
நூல் ஆதாரம் : சுயூத்தி” தப்ஸீர் துர்ருல் மன்சூர் 3/308, இப்னு ஹய்யான்” தப்ஸீர் பஹ்ருல் முஹீத்” தப்ஸீர் ஸஃதல் மஸீர் ஃபீ இல்முத் தப்ஸீர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
குர்ஆன் கூறுகிறது இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பியவர்களுக்கே இதனைக் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
சூரா ஜும்ஆ ஆயத் 4
اهلا لذلك (والله ذو الفضل) المن (العظيم) بالاسلام والنبوة على محمد صلى الله عليه وسلم وقال بالاسلام على المؤمنين ويقال بالرسول والكتاب على خلقه. تفسير . تنوير المقباس لابن عباس
மேற்கூறிய இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள (والله ذو الفضل) வல்லாஹு தூ பழ்ல் அல்லாஹ்வின் அருள் என்பது இஸ்லாத்தை வழங்கியதும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அளித்ததும் ஆகும், இன்னும் இஸ்லாத்தை நம்பிக்கையாளர்களுக்கு அருளியது, இன்னும் அவனது தூதரையும் வேதத்தையும் வழங்கியதாகும்.
நூல் ஆதாரம் :- தன்வீர் அல்மிக்பாஸ் மின் தப்ஸீர் இப்னு அப்பாஸ்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு ரஹ்மத்தாக இறைவன் அனுப்பி வைத்துள்ளான். அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையாக வந்தவர்கள். நாம் அவர்களை கொண்டு நாங்கள் சந்தோஷித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இது நாம் சேகரித்து வைத்திருக்கும் (செல்வங்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது என்ற கருத்துக்களை மேற்கூறிய திர்குர்ஆன் இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا
குர்ஆன் கூறுகிறது அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும்.
சூரா மாயிதா ஆயத் 114
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவனிடமிருந்து ரஹ்மத்தாக உணவு தட்டு இறங்கிய அந்த நாளை பெருநாளாக எடுத்து கொண்டார்கள் என்றிருந்தால் இவ்வுலகிற்கே ரஹ்மத்தாக வந்துதித்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த அந்த நாளை சந்தோஷித்து மகிழ்ச்சியடைய வேண்டும். அதனை பெருநாளாக எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு வழியுருத்திக் கூறுகிறது.
قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து பேரொளி (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க)ளும் தெளிவுமுள்ள (திர்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
சூரா மாயிதா ஆயத் 15
قد جاءكم من الله نورٌ : هو النبي صلى الله عليه وسلم . تفسير الجلالين ” قد جاءكم من الله نورٌ : يعني بالنور ، محمدا صلى الله عليه وسلم. تفسير الطبري ” : ” ثم أخبر تعالى عن القرآن العظيم الذي أنزله على نبيه الكريم فقال “قد جاءكم من اللّه نور وكتاب مبين. تفسير ابن كثير “” قد جاءكم من الله نور : أي ضياء؛ قيل : الإسلام. وقيل : محمد عليه السلام. تفسير القرطبي ” قد جاءكم من الله نور : ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ. ﺯﺍﺩ ﺍﻟﻤﺴﻴﺮ ﻓﻲ ﻋﻠﻢ ﺍﻟﺘﻔﺴﻴﺮ ” تفسير احكام القران ” قد جاءكم من الله نور : ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ. تفسير الرازي ” البحر المديد في تفسير القرآن المجيد “” قد جاءكم من الله نور : عظيم وهو نور الأنوار والنبي المختار صلى الله عليه وسلم. روح المعاني في تفسير القرآن العظيم “” قد جاءكم من الله نور : هو رسول الله صلى الله عليه وسلم. تفسير روح البيان
மேற்கூறிய இறைவசனத்தில் (من الله نور) மினல்லாஹி நூர் அல்லாஹ்விடமிருந்து பேரொளி வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ وسلم ) அல்லாஹ்வின் பேரொளி என்பதன் அர்த்தம் :- இருதிதூதரின் வருகை அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிக்கும்.
ஆதாரம் :- தப்ஸீர் ஜலாலைன்” தப்ஸீர் தபரி” தப்ஸீர் இப்னு கஸீர்” தப்ஸீர் குர்துபி” தப்ஸீர் ஸாதுல் மஸீர் அல் இல்முத் தப்ஸீர்” தப்ஸீர் அஹ்காம் அல் குர்ஆன்” தப்ஸீர் ராஸீ” தப்ஸீர் அல் குர்ஆன் அல் மஜீத்” தப்ஸீர் அல் குர்ஆன் அல் அலீம்” தப்ஸீர் ரூஹுல் பயான் போன்ற அதிகமான தப்ஸீர் திர்குர்ஆன் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவ்வுலகிற்கு நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளியாகவும் ரஹ்மத்தாகவும் இவ்வும்மத்திற்கு இறைவன் வெளிப்படுத்தி உள்ளான். ஆக அந்த பேரொளி ரஹ்மத் வெளிப்பட்ட நாள் அதாவது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அந்த நாட்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தப்படும். இது முஃமின்களுக்கு அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (செல்வங்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்