9) நபி முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்களா?

143

நபி முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்களா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ نُورٌ أَنَّى أراه

 

நான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு “அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?” என்று கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :; அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 291

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : رَأَيْتُ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய இறைவனை நான் பார்த்தேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 2588

 

♦️ஆரம்ப ஹதீஸில் அல்லாஹ் ஒளியானவன் அவனை எப்படி பார்க்க முடியும் என்ற கேள்வி அவனை பார்க்க முடியாது என்ற கருத்தை உணர்த்துகிறது. இரண்டாவது ஹதீஸில் அல்லாஹ்வை நான் பார்த்தேன் என்ற கூற்று அல்லாஹ்வை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள் என்ற கருத்தை உணர்த்துகிறது. மேற்கூறப்பட்ட இருவிதமான ஹதீஸ்களை தெளிவு படுத்தும் வகையில் ஸஹாபாக்களின் கூற்று அமைந்திருப்பதை கீழ் கானும் ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ளலாம்.

 

عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَى مُحَمَّدٌ رَبَّهُ قُلْتُ أَلَيْسَ اللَّهُ يَقُولُ لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ قَالَ وَيْحَكَ ذَاكَ إِذَا تَجَلَّى بِنُورِهِ الَّذِي هُوَ نُورُه

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறைவனைப் பார்த்தார்கள் எனக்கூறிய போது நான் : அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டேன். அதற்கவர் : உனக்கு நாசமுண்டாகட்டும். அது அல்லாஹ்வின் பரிபூரணமான ஒளியிலே அவன் வெளிப்படும் போதுதான் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3201

 

♦️இந்த ஹதீஸில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறைவனைப் பார்த்தார்கள் எனக்கூறிய போது நான் : அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டேன். அதற்கவர் : உனக்கு நாசமுண்டாகட்டும். அது அல்லாஹ்வின் பரிபூரணமான ஒளியிலே அவன் வெளிப்படும் போதுதான் (அவனை காணமுடியாது) என்ற கருத்தை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸில் அல்லாஹ்வை பார்த்தார்கள் என்றும் பூரண ஒளியாக இருக்கும் போது அல்லாஹ்வை காண முடியாது என்றும் கூறப்படுகிறது. இவைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்ற ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள்.

 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَآهُ بِقَلْبِهِ

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அல்லாஹ்வை) தன் உள்ளத்தால் பார்த்தார்கள்.

 

ஆதாரம் முஸ்லிம் 285

 

♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்கள் என்பதன் அர்த்தம் அவர்களுடைய உள்ளத்தால் அல்லாஹ்வின் (பண்புகளை) பார்த்தார்கள். அல்லது அல்லாஹ்வின் (ஒளியை) பார்த்தார்கள் என்று பொருள்படும். இதற்கு மாற்றமாக

 

عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ

 

யார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் (ரூபம் பூரண ஒளியை) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூருகிறாறோ அவர் பொய் சொல்லி விட்டார் என்ற ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்று ஆதாரமாக அமைந்துள்ளது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். புஹாரி 3234

 

♦️குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களுடைய உள்ளத்தால் அல்லாஹ்வின் பண்புகளை பார்த்தார்கள். அல்லாஹ்வின் ரூபம் பூரண ஒளியை பார்க்கவில்லை. இதனை மறுப்பவன் நாசமாகட்டும் என்பது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாகும். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக அல்லாஹ்வின் ரூபத்தை பூரண ஒளியை பார்க்கவில்லை. பார்த்ததாக யாராவது கூறினால் அவன் பொய்யன் என்பது ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றாகும். எனவே இரு ஸஹாபிகளின் கூற்றும் நபிமொழி பிரகாரமே அமைந்துள்ளது. இதற்கு மாற்றமாக வேறுவிதமான நச்சு கருத்தை கூற முற்றபடுவது முற்றிலும் தவறாகும். அது இணைவைப்பில் கொண்டு சேர்த்து விடும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.