9) கேள்வி :- பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறுமியாக இருக்கும் போது இறைதூதர் ﷺ அவர்கள் திருமணம் முடித்து கொடுக்க ஏன் மறுத்தார்கள்?
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திருமண வயது வந்த போது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகி அதிகமானோர் பெண் கேட்டனர். இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வின் உத்திரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’ என்று பதில் உரைத்ததைக் கண்டு கேட்டவர்கள் மௌனமாகினர்.
நூல் ஆதாரம் :- மனாகிப் 2/30,31
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பருவ வயதை எத்திய பின்னர் தான் அவர்களை அதிகமானோர் பெண் கேட்டு வந்தார்கள். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறினார்களே அன்றி வேறில்லை. இது அல்லாமல் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறுமியாக இருக்கிறார்கள் என்று கூறிய சில அறிவிப்புகள் இருந்தாலும் அதில் எவ்வித குற்றமும் இல்லை. காரணம்
وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ
குர்ஆன் கூறுகிறது. அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர். (அவர்களுக்குரியதை) கொடுங்கள்.
வேத நூல் :- திருக்குர்ஆன் 4:6
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا
நம்பிக்கையாளர்களே! யாதொரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல.
வேத நூல் :- திருக்குர்ஆன் 4:19
மேற்கூறிய இறைவசனம் பிரகாரம் சிறுவர்கள் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பருவ வயதை அதாவது திருமண வயதை அடைந்த பின்னர் அவர்களுடைய அனுமதியுடனே திருமணம் நடைபெற வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமண நிகழ்வுக்கு பின்னர் அமுல்படுத்தப் படுகிறது. ஆக சிறுவர் சிறுமியர்களுக்கு திருமணம் செய்து வைப்பதை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது என்ற நற்செய்தியை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்