9) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

83

9) நபி முஹம்மத் ﷺ அவர்களை குறித்து பேசிய மாற்று மத சில நவீன அறிஞர்கள்

 

சேம்பர்ஸ் என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.

 

நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. மேலும் வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்ஷ்டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றடர்கள். அன்னார் ஒரு சமுதாயத் தின் நிறுவனர், ஒரு பேரரசின் நிறுவனர், ஒரு மதத்தின் நிறுவனர்,

 

ஜெனரல் பர்லாங் என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.

 

முஹம்மத் நபி தமது சொந்த வாழ்க்கையில் சமூகத் தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார்.

 

ஸ்டான்லி லேன்புல் (வரலாற்றாசிரியர்) என்பவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறினார்.

 

அரேபிய நபியின் சரிதையை அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்து வருகிறேன். உலகம் இன்று வரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும்.

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இவ்வுலகில் இகழப்பட்ட நிலையில் அழிந்து போனார்கள். அவர்களை புகழ்ந்து மக்கள் மத்தியில் உன்மையை வெளிப்படுத்திய யூத நஸாரா மற்றும் மாற்று மத அறிஞர்கள் அனைவரும் இவ்வுலகில் புகழப்பட்ட நிலையில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த நிலையில் இன்று வரை அவர்கள் பேசப்பட்டு வருகிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.