9) நபி முஹம்மத் ﷺ அவர்கள் பாடிய பாடல்களும் விரும்பி கேட்ட பாடல்களும்
9) நபி முஹம்மத் ﷺ அவர்கள் பாடிய பாடல்களும் விரும்பி கேட்ட பாடல்களும்
⚫1) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுயமாக இயற்றிய கவி பாடல்கள்
عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ جُنْدَبًا يَقُولُ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي إِذْ أَصَابَهُ حَجَرٌ فَعَثَرَ فَدَمِيَتْ إِصْبَعُهُ فَقَالَ هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு போரின் போது) நடந்து கொண்டிருக்கையில் அவர்களுக்குக் (காலில்) கல் பட்டுவிட்டது. இதனால் அவர்களின் (கால்) விரலில் இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள், ‘நீ சொட்டுகிற ஒரு விரல்தானே! நீ பட்டதெல்லாம் இறைவழியில் தானே! என்று (பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜுன்தப் இப்னு சுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6146. முஸ்லிம் 1796 திர்மிதி 3345
⚫2) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவர் பாடிய பாடல்களை பாடியுள்ளார்கள்
عَنْ عُرْوَةُ بْنُ الزُّبَيْر رَضِيَ اللَّهُ عَنْهُ….. اللَّهُمَّ إِنَّ الْأَجْرَ أَجْرُ الْآخِرَهْ فَارْحَمِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ فَتَمَثَّلَ بِشِعْرِ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ لَمْ يُسَمَّ لِي. قَالَ ابْنُ شِهَابٍ وَلَمْ يَبْلُغْنَا فِي الْأَحَادِيثِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمَثَّلَ بِبَيْتِ شِعْرٍ تَامٍّ غَيْرَ هَذَا الْبَيْتِ
(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) இறைவா! (உண்மையான) பலன் மறுமையின் பலனே. எனவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக’ என்று கூறினார்கள்.
அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாடிக்காட்டினார்கள். அவரின் பெயர் என்னிடம் கூறப்படவில்லை. மேலும் இப்னு ஷிஹாப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தப் பாடல்(வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை.
அறிவிப்பவர் :- உர்வத் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3906
عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِنَ الشِّعْرِ؟ فَقَالَتْ كَانَ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِنْ شِعْرِ عَبْدِ اللهِ بْنِ رَوَاحَةَ وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوِّدِ
நான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதேனும் கவி பாடி காட்டுவார்களா? என்று கேட்டபோது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொன்னார்கள் (ஆம்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சில கவிதைகளை பாடுவார்கள்.
அறிவிப்பவர் :- ஷுரைஹா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 867
⚫3) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவர் பாடிய பாடல்களை விரும்பிக் கேட்டுள்ளார்கள்
عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ؟ قُلْتُ نَعَمْ قَالَ هِيهِ فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهِ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهِ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ
ஒரு நாள் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். இவ்வாறே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன் என்றார்கள்.
அறிவிப்பவர் :- ஷரீத் பின் சுவைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் : 4540. இப்னு மாஜா 3758 அஹ்மது 19457
குறிப்பு :- மௌலிது என்பது பிறப்பை குறிக்கும், கவி நடையில் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பாடுவதற்கு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் மௌலிது என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றனர். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்