9) மீலாது விழாக்களும் நபி முஹம்மத் ﷺ அவர்களின் வழிகாட்டலும்
மீலாது விழாக்களும் நபி முஹம்மத் ﷺ அவர்களின் வழிகாட்டலும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
மீலாது விழா என்பது உரைநடையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மற்றும் நபிமார்கள் நல்லடியார்களை புகழ்ந்து பேசுவாதாகும் திர்குர்ஆனில் அரைவாசி பகுதியே 25 நபிமார்களின் வரலாறுகளையும் நல்லடியார்களுடைய வரலாறுகளையும் இறைவன் உரைநடையில் புகழ்ந்து கூறியுள்ளான், இவைகளை முன்பு பார்த்தோம். தற்போது ஹதீஸ் அடிப்படையில் பார்க்கலாம்.
عَنْ اَنَسِ بْنِ مَالِكِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ مَرُّوْا بِحَنَازَةَ فَاَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا وَجَبَتْ قَالَ هَدَا اَثْنَيْتُمْ عَلَيْه خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1367, முஸ்லிம் 949 திர்மிதி 1058 அஹ்மது 19035
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4900 திர்மிதி 1019
عَنْ مُعَاذُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذِكْرُ اْلاَنْبِيَاءِ مِنَ الْعِبَادَةِ وَذِكْرُ الصَّالِحِيْنَ كَفَّارَةٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும்.
அறிவிப்பவர் :- முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அல் ஜாமிவுஸ் ஸகீர் 4331
♦️நபிமார்கள் நல்லடியார்களின் சரித்திர வாழ்க்கை வரலாறுகள் அவர்களின் பிறப்பு சிறப்புக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது நபிவழி என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ
இல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கட்கிழமை தோறும் நோன்பு நோற்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் இது பற்றி ஸஹாபாக்கள் வினவிய போது இன்றைய நாளில் தான் நான் பிறந்தேன் என்பதாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- கதாதா அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1162 அபூ தாவூத் 2426 அஹ்மது 22550
♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பிரதி திங்கட்கிழமை தோறும் தன் பிறந்த நாளை ஞாபகம் ஊட்டுவது மட்டுமின்றி இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நோன்பு நோற்றுள்ளார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! ஸலாமை பரப்புங்கள் (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1854, 2485 இப்னு மாஜா 1334, 3251, 3252 தாரமீ 1501, 2674 அஹ்மது 6450
♦️மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் நபிவழி என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
இடை குறிப்பு :- ஒவ்வொரு முஸ்லிம்களும் பிரதி திங்கட்கிழமை தோறும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை ஞாபகம் ஊட்டி நோன்பு தோற்பது ஸுன்னத்தாகும். இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினம் அல்லது அது அல்லாத தினத்தில் அவர்களின் பிறப்பை ஞாபகம் ஊட்டுவது மட்டுமின்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது, நல்ல நோக்கில் மேடை அமைத்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு சிறப்புக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது நபிவழியாகும். இவையெல்லாம் நன்மைகளை அள்ளித்தரும் நற்காரியங்களாகும்.
குறிப்பு :- பிறப்பை ஞாபகம் ஊட்டுவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் நபிவழியாகும். மேலும் நபிமார்கள் நல்லடியார்களுடைய (பிறப்பை ஞாபகம் ஊட்டி) மக்களுக்கு அவர்களின் வரலாறுகளை சிறப்புக்களை கூருவதும் நபிவழியாகும். மேலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது நபிவழி என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்