Gad அல்லாஹ் என்பவன் யார்?

222

அல்லாஹ் என்பவன் யார்?

 

எல்லா படைப்புக்களையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனை உலக முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல்லாகும். அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன். அவன் தனித்தவன், ஒருவன், இறைவன், கடவுள், படைத்தவன், படைப்பாளி என்றெல்லாம் பல கோணங்களில் கூறப்படும். மேலும் அல்லாஹ் என்ற சொல்லில் ஆண் பால் பெண் பால் கிடையாது மேலும் ஒருவன் என்று ஒன்றை மட்டும் குறிக்குமே தவிர பன்மையை குறிக்காது.  

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ‏

குர்ஆன் கூறுகிறது (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள் அல்லாஹ் ஒருவன்தான்.

சூரா இஃலாஸ் ஆயத் 1  

அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்புக்கள் உண்டு. அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் ஒருவன் என்ற அர்த்தத்தையே தரும். அவை பின்வருமாறு 

(الله)

அல்லாஹ் :- ஒருவனைக் குறிக்கும்.

(لله)

லில்லாஹ் :- ஒருவனைக் குறிக்கும்.

(له)

லஹு :- ஒருவனைக் குறிக்கும்.

(ه)

ஹு :- ஒருவனைக் குறிக்கும்.

இதனால் தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் ஒருவன் என்ற கருத்துக்களை அதிகமான இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.  

اَللّٰهُ الصَّمَدُ

குர்ஆன் கூறுகிறது (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன்.

சூரா இஃலாஸ் ஆயத் 2  

சர்வ படைப்புக்களுக்கும் அவன்பால் தேவையுள்ளது, ஆனால் படைப்புக்களை படைத்த படைப்பாளி அல்லாஹ்விற்கு எந்த விதமான தேவைகளும் கிடையாது. அவன் படைத்த படைப்பினங்கள் அவனின் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  لَمْ يَلِدْ  ۙ وَلَمْ يُوْلَدْ ۙ

குர்ஆன் கூறுகிறது அவன் (எவரையும்) பெறவும் இல்லை; (எவராலும்) பெறப்படவும் இல்லை.

சூரா இஃலாஸ் ஆயத் 3  

படைப்பினங்களுக்கு பிறப்பு இறப்பு உண்டு, ஆனால் படைப்பாளி அல்லாஹ்விற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. எனவே அவனுக்குத் தகப்பனும் இல்லை, சந்ததியும் இல்லை. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது பிறப்பால் இறப்பால் பின்னிப்பிணைந்த வண்ணம் மனித உருவில் உருவெடுக்கும் கடவுள்களை நாம் என்னவென்று வர்ணிப்பது.

   وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

குர்ஆன் கூறுகிறது அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றும் இல்லை.

சூரா இஃலாஸ் ஆயத் 4  

அல்லாஹ் என்பவன் ஒருவன் அவனே படைப்பாளி அவனை தவிரவுள்ள ஏனையவை அவனால் படைக்கப்பட்ட படைப்புக்களே அன்றி வேறில்லை. இந்த உலகத்தில் எந்த உருவங்களையெல்லாம் கடவுள் என்று அவநம்பிக்கை கொள்கிறார்களோ அவைகளுக்கு அவன் ஒப்பானவன் கிடையாது. அவனைப் போன்று எதுவும் இல்லை, எப்பொருளும் இல்லை என்பதே ஆழமான இறைநம்பிக்கையாகும்.  

♦️ குறிப்பு :- சிலை வணக்கம், உருவ வணக்கம், நெருப்பு வணக்கம், கப்ரு வணக்கம் போன்ற பல கற்பனை கடவுள்களை உடைத்தெறியும் உன்னதமான மார்க்கமாக, அறிவுப்பூர்வமான மார்க்கமாக தனித்து இஸ்லாம் விளங்குகிறது. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

நூல் :- (அல்லாஹ் அஹதானவன்)

WORLD ISLAM YSYR ✍️       அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.