I Love My Prophet Muhammad ﷺ

99

I Love My Prophet Muhammad ﷺ  

 

பெப்ரவரி 14ல் ஒவ்வொருவரும் காதலை வெளிப்படுத்துவது தான் உலக நடைமுறை என்றால்! அதற்கு முழு தகுதியானவர்கள். இஸ்லாத்தின் பார்வையில் தனித்து விளங்கும் சாந்தி நபி சர்தார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! அன்றி வேறில்லை.

 

  النَّبِيُّ أَوْلَى بِالمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ 

 

திண்ணமாக, இறைநம்பிக்கையார்கள் அவர்களின் உயிரை விட இந்த நபி மிக்க மேலானவர்களாக இருக்கிறார்கள். குர்ஆன் கூறுகிறது

 

சூரா அஹ்ஜாப் ஆயத் 6  

 

🔶சாந்தி நபி சர்தார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தங்களது உயிர்களை விடவும் அதிகளவில் நேசம் காதல் கொண்ட நிலையில் முஃமின்கள் நிழைத்திருப்பார்கள். 

 

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏ 

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்துக்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது. 

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 15 முஸ்லிம் 44 தாரமி 2783 அஹ்மது 12814

 

🔶முஸ்லிம்களே! நீங்கள் முஃமின்களாக மாறவேண்டும் என்றால் சர்தார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தங்களது உயிர்களை விடவும் அதிகளவில் நேசம் காதல் கொள்ள வேண்டும் ஹுப்பு வைக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வழியுருத்திக் கூறுகிறது. 

 

أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لاَ شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْت 

 

ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்டார்கள். அம்மனிதர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை என்று பதிலளித்தார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய் என்றார்கள். 

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 3683 முஸ்லிம் 2639

 

🔶அல்லாஹ் ரஸூலை நேசம் காதல் கொள்பவர்கள் மறுமையில் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்தை இஸ்லாம் வழியுருத்திக் கூறியுள்ளது. இதனை தெளிவான முறையில் கூறப்போனால் முஸ்லிம்கள் முஃமின்களாக மாற வேண்டும் என்றால்! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் கொள்ளும் ஹுப்பு பாட்டியாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வழியுருத்திக் கூறுகிறது. 

 

♦️குறிப்பு :- காதல் என்ற பெயரில் தகுதியுள்ளவர்களை விட்டு விட்டு தகுதியற்றவர்களை காதலிப்பது ஏன்? ஆரம்பத்தில் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசம் காதல் கொள்ளுங்கள். அடுத்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தையும் அடுத்து நபிமார்கள் நல்லடியார்களையும் அடுத்து தாய் தந்தையும் அடுத்து மனைவி பிள்ளைகளையும் அடுத்து உற்றார் உறவினர்கள் தம் நண்பர்களுடனும் நேசம் காதல் கொள்ளுங்கள். தகுதியுள்ளவர்களை உதறித்தள்ளி விட்டு தகுதியற்ற அன்னிய பெண்கள் மீது ஆசை காதல் கொள்வது அழகல்ல. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் 

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம் 

Leave A Reply

Your email address will not be published.